ETV Bharat / state

காட்பாடி அருகே கிராவல் மண் கொள்ளை.. அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதாக மக்கள் புகார்!

காட்பாடி அருகே சாலை பணிக்காக குறிப்பிட்ட அளவை மீறி ஏரியில் மண் எடுப்பதால் குத்தகைக்கு எடுத்த மீன் பண்ணை நஷ்டத்தில் செல்கிறது எனவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டனர்.

Katpadi
அளவிற்கு மீறி ஏரியில் மண் எடுக்கும் தனியார் நிறுவனம்
author img

By

Published : Apr 13, 2023, 9:20 AM IST

காட்பாடி அருகே கிராவல் மண் கொள்ளை என மக்கள் புகார்

வேலூர்: காட்பாடி அடுத்த மதிமண்டலம் தாதிரெட்டிபள்ளியில் உள்ள பெரிய ஏரியில் ஆந்திரா - தமிழ்நாட்டை இணைக்கும் சாலை அமைக்கும் பணிக்காக தாதிரெட்டிபள்ளியில் உள்ள ஏரியிலிருந்து மண் எடுக்க குஜராத்தை சேர்ந்த மான்டிகார்லோ என்ற தனியார் நிறுவன ஒப்பந்ததாரருக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் அவர்கள் அந்த ஏரியில் அரசு நிர்ணயத்த ஒரு மீட்டர் அளவை விட ஐந்து மீட்டர் முதல் ஆறு மீட்டர் அளவிற்கு கிராவல் மண்ணை இரவு, பகலுமாக கடந்த நான்கு மாதமாக அள்ளி வருவதாக கூறப்படுகிறது. இதனால் கிராமத்தை சுற்றியுள்ள மக்களின் நீர் ஆதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

மேலும், அதே ஏரியில் கார்த்தி என்பவர் மீன் பண்ணை வைக்க ஜிஎஸ்டி உட்பட 4 லட்ச ரூபாய் செலவு செய்து மீன் குஞ்சுகளை ஏரியில் வளர்க்க குத்தகை எடுத்துள்ளார். இவர்கள் இவ்வாறு மண்ணை எடுப்பதால் ஏரியில் உள்ள மீன்கள் அடிக்கடி செத்து மிதப்பதாகவும், மேலும் இவர்கள் எடுக்கும் பள்ளத்தில் மீன்கள் புதைந்து கிடப்பதாகவும் கார்த்தி வேதனை தெரிவித்துள்ளார்.

அதோடு, இந்த கிராவல் மண் கொள்ளையால் ஏரியின் வழியாக செல்லும் மின்கம்பங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், ஏரியில் உள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட பனை மரங்களை இவர்கள் வேரோடு சாய்த்துள்ளதாகவும் அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

விவசாயி கார்த்திக் தங்களது மீன் வளர்ப்பு சங்கத்தில் மற்றும் பொதுப்பணி துறையின் கீழே இயங்கும் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள், பிடிஓ, கிராம பஞ்சாயத்து தலைவர் என இது குறித்து பலரிடம் முறையிட்டும் இந்த பிரச்னையை யாரும் கண்டு கொள்ளவில்லை என்றும் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படுவதால் முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: Karnataka Election: திருவண்ணாமலை கோயிலில் கர்நாடக அமைச்சர் அசோக் சிறப்பு பூஜை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.