ETV Bharat / state

வேலூர்: அடர்ந்த வனப்பகுதியில் பெண் சடலம் மீட்பு - போலீசார் விசாரணை

author img

By

Published : Jan 27, 2023, 10:25 PM IST

வேலூர் அருகே 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் சடலாக கண்டெடுக்கப்பட்டார்.

Etv Bharat
Etv Bharat

வேலூர் அருகே உள்ள காப்புக்காடு பாலமதி முருகன் கோயில் அருகே வனப்பகுதிக்குள் அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க பெண் சடலமாக கிடப்பதாக பாகாயம் கிராம நிர்வாக அலுவலருக்குத் தகவல் இன்று அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலர் யாகண்டீஸ்வரன், பாகாயம் காவல் நிலைய போலீசாருக்குத் தகவலளித்த நிலையில் அங்கு காவல் ஆய்வாளர் செந்தில் குமார் தலைமையிலான போலீசார் விரைந்தனர்.

அங்கு சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், சம்பவ இடத்தில் மோப்ப நாய்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர்.

இவ்வாறு, திருமணமான 30 வயதுமிக்க அடையாளம் தெரியாத பெண் வனப்பகுதிக்குள் மிகவும் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தது அப்பகுதியினர் இடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.

இதனையடுத்து போலீசார், தங்கள் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: சென்னையில் சுவர் இடிந்து விழுந்ததில் சாலையில் நடந்து சென்ற பெண் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.