ETV Bharat / state

வேலூரில் தொடர் வேட்டை ஆரம்பம் ..கள்ளச்சாராயம் தொடர்பான வழக்கில் 7 பேர் கைது - எம் எஸ் முத்துச்சாமி

கள்ளச்சாராயத்தை தடுக்க மேற்கொள்ளப்படும் தேடுதல் கண்காணிப்பின் அடிப்படையில் வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 25 முதல் ஜூன் 19ஆம் தேதி வரை மொத்தம் 269 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

liquor
கோப்புபடம்
author img

By

Published : Jun 20, 2023, 5:19 PM IST

வேலூர்: கள்ளச்சாராயத்தை தடுக்க மேற்கொள்ளப்படும் தேடுதல் கண்காணிப்பின் அடிப்படையில் வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 25 முதல் ஜூன் 19ஆம் தேதி வரை மொத்தம் 269 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இதில், தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி வந்ததாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்ததில் 22 பேர் உயிரிழந்ததாக கருதப்படும் சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கள்ளசாராயம் காய்ச்சுவது மற்றும் விற்பனை செய்வது தொடர்பானவற்றை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்,வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக என்.மணிவண்ணன் கடந்த மே 25 ஆம் தேதி பொறுப்பேற்றார்.அவர் பொறுப்பேற்ற நாள் முதல் கள்ளச்சாராயத்தை ஒழிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறார்.அதேபோன்று கள்ளச்சாராயத்தை விற்பனை செய்பவர்களின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்கள் முடக்கப்படும்.மேலும் அவர்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக, மாவட்டத்திலுள்ள மலைப்பகுதிகளில் மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை காவலர்கள், தனிப்படை காவலர்கள் மேலும் உள்ளூர் காவலர்களும் தீவிர தேடுதல் பணி மேற்கொண்டு மலைப்பகுதிகளில் பதுக்கப்பட்டுள்ள கள்ளச்சாராயம், சாராய ஊறல், சாராயம் தயாரிக்க பயன்படும் பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர,சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் தயாரிப்பவர்களையும், மேலும் அதனை கடத்தி விற்பவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.

இந்த தேடுதல் பணியில் வேலூர் சரக காவல் துணைத் தலைவர் (டிஐஜி) எம்.எஸ்.முத்துச்சாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகளும் அவ்வப்போது நேரடியாக இச்செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த மே 25 ஆம் தேதி முதல் ஜூன் 19 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட தேடுதல் பணியில் வேலூர் மாவட்டம் முழுவதும் 32,000 லிட்டர் சாராய ஊறல், 6550 லிட்டர் கள்ளச்சாராயம், 2625 மதுபாட்டில்கள் மேலும் சாராயம் தயாரிக்க பயன்படுத்தும் வெல்லம் 4910 கிலோ, வெள்ளை சர்க்கரை 870 கிலோ, வேலம்பட்டை 800 கிலோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

இந்த தேடுதல் பணியின் போது 1.98 கிலோ கஞ்சா, கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய 17 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. மேலும் கள்ளச்சாராயம் தொடர்பாக 262 வழக்குகளும்,கஞ்சா தொடர்பாக 7 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன .கள்ளச்சாராயம் காய்ச்சியது தொடர்பாக 7 பேர் குண்டர் தடுப்புக் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க:நேற்று சிறந்த சமூக ஊடக செயற்பாட்டாளர் விருது; இன்று சைபர் கிரைம் போலீசாரால் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.