வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று மட்டும் 110 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1123ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 327 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ள நிலையில், 10 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நேற்று புதிதாக பாதிப்புக்கு உள்ளானவர்களில் 60 பேர், சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியும் கரோனா தனிமைப்படுத்துதல் மையமாக மாற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து பரிசோதனைகள் மேற்க்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மாவட்டம் முழுவதும் தீவிர நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: நாகையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் - சிறப்பு அலுவலர் முனியநாதன் ஆய்வு