ETV Bharat / state

கடைசி இடம் பிடிச்சாலும் ஹேப்பி அண்ணாச்சி! ஏன் தெரியுமா? - Tamilnadu'

வேலுார்: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் வேலுார் மாவட்டம் கடைசி இடம் பிடித்தாலும், கடந்த கல்வியாண்டில் பெற்ற தேர்ச்சி விழுக்காட்டை விட இந்தாண்டு இரண்டு விழுக்காடு கூடுதலாக பெற்றுள்ளது.

10th-result-vellore
author img

By

Published : Apr 29, 2019, 12:26 PM IST

Updated : Apr 29, 2019, 1:01 PM IST

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் மாநிலம் முழுவதும் 95.2 விழுக்காடு மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில், வேலூர் மாவட்டம் 89.98 விழுக்காடு மாணவ-மாணவிகள் தேர்ச்சிபெற்று கடைசி இடம் பிடித்திருப்பது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பத்தாம் வகுப்புத் தேர்வில் வேலூர் மாவட்டத்தில் 25 ஆயிரத்து 274 பேர் மாணவர்கள், 25 ஆயிரத்து 200 பேர் மாணவிகள் என மொத்தம் 50 ஆயிரத்து 474 பேர் தேர்வு எழுதினர். இதில், 21 ஆயிரத்து 786 பேர் மாணவர்கள், 23 ஆயிரத்து 630 பேர் மாணவிகள் என மொத்தம் 45 ஆயிரத்து 416 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

2018ஆம் ஆண்டில் 88.84 விழுக்காடு தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 89.98 விழுக்காடு பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு இரண்டு விழுக்காடு கூடுதலாக தேர்ச்சி பெற்றிருந்தாலும், மாநில அளவில் கடைசி இடம் பிடித்துள்ளது.

பன்னிரெண்டாம் வகுப்பில் பொதுத் தேர்விலும் வேலுார் மாவட்டம் 85.47 விழுக்காடு தேர்ச்சி பெற்று கடைசி இடம் பிடித்துள்ளது. இதனால், வேலுார் மாவட்ட சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், வரும் காலங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் மாணவ-மாணவிகள் தேர்ச்சி விழுக்காட்டை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பத்தாம் வகுப்பு தேர்வில் வேலூர் மாவட்டம் கடைசியிடம் -  ஆசிரியர்கள் பெற்றோர்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன இதில் மாநிலம் முழுதும் 95.2 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர் இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வில் வேலூர் மாவட்டம் 89.98% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று கடைசி இடம் பிடித்திருப்பது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது அதாவது வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ஆண்கள் 25 ஆயிரத்து 274 பேர் பெண்கள் இவற்றை 25,200 பேர் என மொத்தம் 50 ஆயிரத்து 474 பேர் தேர்வு எழுதினர் இதில் ஆண்கள் 21 ஆயிரத்து 786 பேர் பெண்கள் 23 ஆயிரத்து 630 பேர் என மொத்தம் 45 ஆயிரத்து 416 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர் அதாவது சதவீதம் அடிப்படையில் வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 89.98 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் இது பிற மாவட்டங்கள் ஒப்பிடும்போது வேலூர் மாவட்டம் கடைசி இடம் என்பது குறிப்பிடத்தக்கது ஆண்களை விட பெண்கள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர் சதவீத அடிப்படையில் ஆண்கள் 86.20%  பேரும் பெண்கள் 93.77 % பேரும் வேலூர் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர் அதேவேளை அரசு பள்ளிகளை பொறுத்தவரை இந்த ஆண்டு 86.85%  மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு 25 ஆயிரத்து 343 பேர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர் இதில் 22011 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது வேலூர் மாவட்டம் 2% கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளது அதாவது கடந்த 2018 ஆம் ஆண்டு வேலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பில் 88. 84 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர் இருந்தாலும் இந்த ஆண்டு தேர்ச்சியில் கடைசி இடம் பிடித்திருப்பது வேலூர் மாவட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஏற்கனவே சமீபத்தில் வெளியான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்விலும் வேலூர் மாவட்டம் 85.47 % சதவீதம் தேர்ச்சி பெற்று கடைசி இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது அதைத் தொடர்ந்து தற்போது பத்தாம் வகுப்பு தேர்விலும் கடைசி இடம் பிடித்திருப்பது வேலூர் மாவட்ட சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் எனவே வேலூர் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வரும் காலங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் மாணவ மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும் என மாவட்ட பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
Last Updated : Apr 29, 2019, 1:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.