ETV Bharat / state

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை கொன்று புதைத்த இளைஞர் - காதலியை கொன்ற காதலன்

திருச்சி: திருமணத்திற்கு வற்புறுத்திய காதலியை கழுத்தை அறுத்து கொன்று கொள்ளிடம் ஆற்றங்கரையில் உடலை புதைத்த இளைஞரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

murder, கொலை
murder, கொலை
author img

By

Published : Jan 15, 2020, 10:20 AM IST

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த ஆண்டி வலசை சேர்ந்தவர் கந்தசாமி (50). கணவரைப் பிரிந்து வாழும் இவரது மகள் வெள்ளையம்மாள் (21) கந்தசாமியின் வீட்டில் வசித்துவந்தார். இதற்கிடையே நாமக்கல் அருகே உள்ள கொசவம்பட்டி பகுதியைச் சேர்ந்த குறி சொல்லும் நபரான முத்து (25) என்பவர் அடிக்கடி வெள்ளையம்மாளின் உறவினர் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்போது முத்துவுக்கும் வெள்ளையம்மாளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இந்தப் பழக்கம் காதலாக மாறி திருமணம் செய்துகொள்வதாகக் கூறி முத்து வெள்ளையம்மாளை அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளார். மேலும், முத்து குடும்பத்தில் கஷ்டம் இருப்பதாகக்கூறி ஏழரை பவுன் நகை 1.5 லட்ச ரூபாய் பணத்தை வெள்ளையம்மாளிடம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில் வெள்ளையம்மாள் முத்துவிடம் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்திவந்துள்ளார். இருப்பினும் காலம் கடத்திவந்த முத்து திருமணத்தை தள்ளிப் போட்டு வந்துள்ளார்.

திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் தான் கொடுத்த பணம், நகை உள்ளிட்டவற்றை திரும்பி அளிக்கும்படி வெள்ளையம்மாள் தகராறு செய்துள்ளார். இதன்காரணமாக திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி திருச்சியை அடுத்த மணச்சநல்லூர் அருகிலுள்ள துறையூர் கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு வெள்ளையம்மாளை அழைத்துச்சென்ற முத்து திருமணம் செய்துகொள்ள முடியாது என மறுத்துள்ளார்.

murder, கொலை
கொலைசெய்யப்பட்ட வெள்ளையம்மாள்

இதில் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே முத்து தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து வெள்ளையம்மாளின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த வெள்ளையம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதன்பின் கொள்ளிடம் ஆற்றங்கரை ஓரத்திலேயே வெள்ளையம்மாளின் உடலை குழிதோண்டி முத்து புதைத்துவிட்டு திருச்செங்கோடு வந்துள்ளார்.

இதனிடையே கடந்த 12ஆம் தேதி மகள் காணாமல்போனதை அறிந்த கந்தசாமி திருச்செங்கோடு ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் வெள்ளையம்மாள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் முத்து நேற்று முன்தினம் (13ஆம் தேதி) வெள்ளையம்மாளை கொலை செய்தை ஒப்புக்கொண்டு திருச்செங்கோடு வட்டாட்சியர் கதிரவேலுவிடம் சரணடைந்தார். சரணடைந்த முத்துவை கதிர்வேலு திருச்செங்கோடு ஊரக காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த ஊரக காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடேசன் முத்துவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டார். அதன்பின் திருச்செங்கோடு ஊரக காவல் துறையினர் வாத்தலை காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

இதனடிப்படையில் அங்கு சென்ற வாத்தாலை காவல் துறையினர் வெள்ளையம்மாள் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து அவரது சடலத்தை தோண்டி எடுத்தனர். பின்னர் உடற்கூறாய்வு செய்யப்பட்டு வெள்ளையம்மாளின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையும் படிங்க: பெரியாரை தைரியமாக விமர்சித்தவர் சோ - ரஜினி புகழாரம்

Intro:திருமணத்திற்கு வற்புறுத்திய காதலியை ஏமாற்றி அழைத்து சென்று மணச்சநல்லூர் அருகே கழுத்தை அறுத்து கொலை செய்து கொள்ளிடம் ஆற்றங்கரையில் உடலை புதைத்த கொடூரம் Body:நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள பன்னீர்குத்திப்பாளையம் ஊராட்சியை சேர்ந்த ஆண்டி வலசு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (50) குடுகுடுப்பை அடித்து குறி செல்லும் தொழில் செய்து வரும் இவர் அதே பகுதியில் வசித்து வரும் இவரது சமூகத்தை சேர்ந்த சுமார் 60 குடும்பங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்டவர்களுக்கு தலைவராக உள்ளார். இவருக்கு இரண்டு மனைவிகள், இதில் இரண்டாவது மனைவிக்கு இரண்டாவதாக பிறந்தவர் இவரது மகள் வெள்ளையம்மாள் (21) கணவரை பிரிந்து வாழும் வெள்ளையம்மாள் தனது தந்தை கந்தசாமி வீட்டில் வசித்துவந்தார். இந்நிலையில் நாமக்கல் அருகே உள்ள கொசவம்பட்டி பகுதியை சேர்ந்த குடுகுடுப்பை அடித்து குறி சொல்லும் தொழில் செய்து வந்து முத்து (25) அடிக்கடி வெள்ளையம்மாளின் உறவினர் வீட்டிற்கு வந்து செல்லும் போது முத்துவுக்கும் வெள்ளையம்மாளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பழக்கம் காதலாக மாறி திருமணம் செய்து கொள்வதாக கூறி அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். மேலும் முத்து குடும்ப கஷ்டம் இருப்பதாக கூறி 7 1/2 பவுன் நகை 1 1/2 லட்ச ரூபாய் பணத்தை வெள்ளையம்மாளிடம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் வெள்ளையம்மாள் முத்துவிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இருப்பினும் காலம் கடத்தி வந்த முத்து திருமணத்தை தள்ளிப் போட்டு வந்துள்ளார். திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் தான் கொடுத்த பணம் நகையை திரும்ப கொடுக்கும்படி வெள்ளையம்மாள் தகராறு செய்து வந்துள்ளார். இதன்காரணமாக திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி திருச்சியை அடுத்த மணச்சநல்லூர் அருகிலுள்ள துடையூர் கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு வெள்ளையம்மாளை அழைத்துச்சென்ற முத்து திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுத்துள்ளார். இதில் 2 பேருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்படவே முத்து திட்டமிட்டு எடுத்து வந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வெள்ளையம்மாள் கழுத்தை அறுத்து உள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த வெள்ளையம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அதன்பின் முத்து கொள்ளிடம் ஆற்றங்கரை ஓரத்திலேயே வெள்ளையம்மாளின் உடலை குழிதோண்டி புதைத்து விட்டார். பின்னர் ஏதும் தெரியாதது போல் திருச்செங்கோடு வந்துள்ளார். கடந்த 12-ம் தேதி மகள் காணாமல் போனதை அறிந்த கந்தசாமி திருச்செங்கோடு ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பதிவு செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்த நிலையில் முத்து நேற்று 13ஆம் தேதி திங்கட்கிழமை வெள்ளையம்மாளை தான் கொலை செய்தேன் என கூறி திருச்செங்கோடு தாசில்தார் கதிரவேலுவிடம் சரணடைந்தார். சரணடைந்த முத்துவை தாசில்தார் கதிர்வேல் திருச்செங்கோடு ஊரக காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த ஊரக காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடேசன் முத்துவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனார்.

அதன்பின் திருச்செங்கோடு ஊரக போலீசார் வாத்தலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனடிப்படையில் விரைந்துசென்ற வாத்தாலை போலீசார் வள்ளியம்மாள் புதைக்கப்பட்ட இடத்தில் அவரது சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்துவருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து முத்துவிடம் திருச்செங்கோடு ஊரக காவல்நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.                   Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.