ETV Bharat / state

ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் முன்பதிவு தொடக்கம்

ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸில் பக்தர்கள் தங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான முன்பதிவு இன்று (ஜூலை 13) முதல் தொடங்குகிறது.

ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்
ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்
author img

By

Published : Jul 13, 2021, 9:32 AM IST

திருச்சி: ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸில் வரும் ஜூலை 24ஆம் தேதி முதல் பக்தர்கள் தங்க அனுமதிக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு இன்று (ஜூலை 13) முதல் தொடங்குகிறது. இது குறித்து அறநிலையத் துறை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை சாலையில் யாத்திரி நிவாஸ் தங்கும் விடுதி ஒரே நாளில் சுமார் ஆயிரம் நபர்கள் தங்கும் வகையில் உள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக சுமார் 72 நாள்கள் வழிபாட்டுத்தலங்களில் பக்தர்கள் அனுமதியின்றி, பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தன. கடந்த மே , ஜுன் மாதங்களில் கரோனா தொற்று அதிகம் இருந்த நேரத்தில் கரோனா சிகிச்சை மையமாக செயல்படுத்த திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் யாத்திரி நிவாஸ் வளாகம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

யாத்திரி நிவாஸ் வளாகம்:

தற்போது கரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளதையடுத்து திருச்சி மாவட்ட நிர்வாகம் கடந்த ஜூலை 10ஆம் தேதி யாத்திரி நிவாஸ் வளாகத்தை சுத்தப்படுத்தி கிருமி நாசினி தெளித்து மீண்டும் ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, வருகிற ஜூலை 23ஆம் தேதி தன்வந்திரி ஹோமம் நடத்தப்படவுள்ளது. பின்னர், ஜூலை 24ஆம் தேதி முதல் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு இன்று (ஜூலை 13) முதல் தொடங்குகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மதுரை மீனாட்சி கோயிலில் ஆடி முளைக்கொட்டு உற்சவம் தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.