ETV Bharat / state

ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்த்த பெண் மாடு முட்டி படுகாயம்!

திருச்சி: சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த பெண் மாடு முட்டியதில் படுகாயமடைந்துள்ளார்.

சூரியூர் ஜல்லிக்கட்டு
சூரியூர் ஜல்லிக்கட்டு
author img

By

Published : Jan 16, 2020, 1:17 PM IST

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் ஜல்லிக்கட்டுப் போட்டியை மாவட்ட ஆட்சியர் சிவராசு கொடியசைத்து தொடங்கிவைத்தார். ஜல்லிக்கட்டுப் போட்டியில் 600 காளைகளும் 500 மாடுபிடி வீரர்களும் களத்தில் உள்ளனர்.

மேலும், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி, தஞ்சை, திண்டுக்கல் புதுக்கோட்டை அரியலூர், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து இளைஞர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைப் பார்த்து ரசித்துவருகின்றனர்.

மாடுகள் முட்டியதில் பல வீரர்களுக்கு காயம் ஏற்பட்டு அங்கு அமைக்கப்பட்டிருக்கும் மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், திருச்சி உறையூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மனைவி ஜோதிலட்சுமி (60) பார்வையாளர் மாடத்திலிருந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

சூரியூர் ஜல்லிக்கட்டு

அப்போது சீறிப்பாய்ந்துவந்த காளை ஒன்று அவரை முட்டித் தள்ளியது. இதில், படுகாயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு முதலுதவிக்காக அங்குள்ள மருத்துவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு ஜோதிலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: விளையாட்டு காட்டிய புதுகை மாடு... 14 காளைகளை அடக்கிய ஜெய்ஹிந்த்புரம் விஜய்!

Intro:Body:திருச்சி:
திருச்சி அருகே சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் அவர் 600 காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்தன. வேடிக்கை பார்த்த பெண் மாடு முட்டி படுகாயம் அடைந்தார்.
திருச்சி மாவட்டத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி திருவெறும்பூர் அருகே பெரிய சூரியூரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
மாவட்ட ஆட்சியர் சிவராசு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகளும், இதனை அடக்க 500 மாடுபிடி வீரர்களும் களத்தில் உள்ளனர்:
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளைர்..
திருச்சி, தஞ்சை, திண்டுக்கல் புதுக்கோட்டை அரியலூர், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து இளைஞர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்த்து ரசித்து வருகின்றனர் மாடுகள் முட்டியதில் ஒரு சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது உடனடியாக வீரர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் திருச்சி உறையூர் ஐச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மனைவி ஜோதிலட்சுமி 60 பார்வையாளர் மாடத்தில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் அப்போது சீறிப்பாய்ந்து வந்த காளை ஒன்று அவரை முட்டித் தள்ளியது படுகாயம் அடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயம் அடைந்ததால் அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.