ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் குடும்பங்களுக்கு திமுக சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுவருகின்றன. அண்மையில், திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்த 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தின் மூலம் உதவிகளை செய்தும் வருகின்றனர்.
அந்த வகையில், திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றியம் பச்சமலை மணலோடை பகுதியில் மூவாயிரம் பழங்குடியின குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். கரோனா பாதிப்பின் காரணமாக வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கின்றனர்.
இந்நிலையில், திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தலைமையில், சுமார் மூவாயிரம் பழங்குடியின குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி , மளிகை பொருள்கள், காய்கறிகள் மற்றும் முட்டை உள்ளிட்ட உணவு தொகுப்பு வழங்கப்பட்டது.
இதில், ஏராளமான மக்கள் தகுந்த இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து நிவாரண பொருள்களை வாங்கிச் சென்றனர்.
இதையும் படிங்க: மத்தியப் பிரதேசத்தில் விபத்து: புலம்பெயர்ந்த தொழிலாளிகள் 8 பேர் உயிரிழப்பு