திருச்சி: மணப்பாறை கருப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட செவக்காட்டூரைச் சேர்ந்த ஐஸ் வியாபாரி சீனிவாசன் என்பவர் நேற்று முன்தினம் (டிச. 14) மாலை உடல்நிலை குறைவால் உயிரிழந்தார். இவரது இறுதிச்சடங்கு நேற்று (டிச.15) மாலை நடைபெற்றது.
அப்போது இடுகாட்டிற்குச் செல்லும் வழியில் உள்ள கருப்பூர் பெரியகுளத்துப் பகுதியில் கழுத்தளவில் நீர் தேங்கியிருந்தது. அதில், சடலத்துடன் கடந்து சென்றுள்ளனர். அந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது போல் புதூர், ஒத்தக்கடை பகுதி கிராம மக்களும் இந்த வழியாகத்தான் இடுகாட்டிற்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதாகவும், இதனால் கடந்த ஒன்றரை வருடங்களாக கழுத்தளவு நீரில் சடலத்துடன் கடந்து சென்று வரும் தங்களுக்கு விரைவில் பாலம் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தேனியில் உடலை அடக்கம் செய்ய ஆற்றை கடக்கும் அவலம்