திருச்சி: கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தின் தேமுதிக அவைத்தலைவர் இல்ல காதணி விழாவிற்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு மணப்பாறை ஆண்டவர் கோயில் பகுதியை வந்தடைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு, தேமுதிக கட்சியின் நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகளின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர் கட்சிக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.
அப்போது அவருக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கிரீடம், மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து முன்னதாக மணப்பாறை முறுக்கு வாங்கி வைத்திருந்த தேமுதிக நிர்வாகிகள் அதை விஜயகாந்திற்குக் கொடுத்திடக்கோரி, கொடுத்து அனுப்பினர்.
சிறப்பு வரவேற்பில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார், மாவட்டச்செயலாளர் பாரதிதாசன் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:கேரளாவில் நிலச்சரிவு... ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு...