ETV Bharat / state

தன்னை பிரதமராக எண்ணிக் கொண்டு பேசுகிறார் நிர்மலா சீதாராமன் - விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 24, 2023, 4:38 PM IST

Thirumavalavan Byte: வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்தக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழக முழுவதும் ஜனவரி 29ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதால், பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

திருமாவளவன் விமர்சனம்
தம்மை பிரதமராக எண்ணிக் கொண்டு பேசுவதைப் போன்ற தொனியை வெளிப்படுத்துவது ஏற்புடையதல்ல

திருச்சி: தந்தை பெரியாரின் 50வது நினைவு தினத்தை ஒட்டி, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரசியலை நீர்த்துப் போகச் செய்வதற்கு சில சனாதன சக்திகள் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றன. தொடர்ந்து பெரியாருக்கு எதிரான அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர். பெரியார் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு உரியவர் அல்ல, ஒட்டுமொத்த விளிம்பு மக்களுக்குத்தானவர் என்பதை உணராத சனாதன சக்திகள் தொடர்ந்து தங்களது காழ்ப்புணர்வை கக்கிக் கொண்டிருக்கின்றனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றிவிட்டு மசோதாக்கள் நிறைவேற்றம்: அவர்களை வீழ்த்துகின்ற முயற்சியில் அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணி என்னும் பெயரில் ஓரணியில் திரண்டு சமூக நீதிக்கான போராளிகள் ஒன்றிணைந்துள்ளோம். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் சனாதன சக்திகளை விரட்டியடிப்போம். பாரதிய ஜனதா அரசு ஆட்சி பொறுப்பேற்ற காலத்திலிருந்து தொடர்ந்து இதே அதிகார போக்கை கடைப்பிடிக்கிறது.

அவர்கள் எதிர்க்கட்சியை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. அரசியலமைப்பு சட்டத்தையே மதிப்பதில்லை. அவர்கள் விரும்பியதைப் போலச் சட்ட மசோதாக்களை நிறைவேற்றி வருகின்றனர். அப்படித்தான் இந்த கடைசி கூட்டத் தொடரில் சட்ட மசோதாக்களை அறிமுகப்படுத்துவது, விவாதிப்பது ஆகிய அமர்வில் முக்கிய மூன்று சட்ட மசோதாக்களை நிறைவேற்றி விட வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு எதிர்ப்பு இல்லாமல் நிறைவேற்றி இருக்கிறார்கள்.

இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. நாட்டு மக்கள் இதனை மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் உரியப் பாடத்தைக் கற்பிப்பார்கள்.

இதையும் படிங்க: டிச.26-இல் தூத்துக்குடி வருகிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

வாக்குச் சீட்டு முறை; பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும்: வரும் 29 ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் EVM வாக்குப்பதிவு முறை கூடாது, வாக்குச் சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என கூறி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இந்தியா கூட்டணியில் இது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்கள் இந்த கருத்துக்குப் பேராதரவு தர வேண்டும்.

வெல்லும் ஜனநாயக மாநாடு தவிர்க்க முடியாத காரணத்தினால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மழை பாதிப்பு ஏற்பட்ட நிலையில் 23 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவித்திருந்த மாநாடு 29 ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது தென் மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களுக்கான மீட்புப் பணி நடைபெற்று வரும் நிலையில் இந்த மாநாட்டை ஜனவரி இறுதி வாரத்திற்குத் தள்ளி வைத்துள்ளோம்.

பாஜக ஒழிப்பைப் பற்றிப் பேசுவதற்குத் தகுதி இல்லை: முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான ஊழல் குற்றச்சாட்டுச் சிறைத் தண்டனையை சட்டப்படி எதிர்கொள்வதற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த வழக்கறிஞர்கள் அனைத்து முயற்சியையும் மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர் பொன்முடியும் மேல்முறையீட்டிற்கு ஆயத்தமாகி இருக்கிறார். சட்டப்படி உரியத் தீர்வை அவர்கள் பெறுவார்கள். பாஜகவைச் சார்ந்தவர்கள் ஊழல் குறித்துப் பேசுவதற்கு அருகதை அற்றவர்கள்.

மெகா ஊழல் சிஐஜியு அறிக்கையின் படி இதுவரையில் எந்த ஆட்சியிலும் நடைபெறாத அளவிற்கு மிக மோசமான முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஊழல் ஆட்சியாக இந்த ஆட்சி விளங்குகிறது. ஆகவே பாஜகவைச் சார்ந்தவர்கள் ஊழல் ஒழிப்பைப் பற்றிப் பேசுவதற்கு எந்த தகுதியும் அற்றவர்கள்.

மக்களின் உணர்வைக் காயப்படுத்துகிறார் நிர்மலா சீதாராமன்: ஆண்டுதோறும் தமிழக அரசு மத்திய அரசு தரவேண்டிய நிதியைத் தான் மத்திய அரசு வழங்கியுள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதி. ஆனால் பாதிப்புக்கு ஏற்றவாறு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்பது தான் அரசின் கோரிக்கை. அதை இந்திய ஒன்றிய அரசு பொருட்படுத்தவே இல்லை.

ரூபாய் 21,000 கோடியாகத் தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்த நிலையில், சிறப்பு நிதி ஒரு தம்படி பைசா கூட வழங்கப்படவில்லை. ஆண்டுதோறும் வழங்கப்பட வேண்டிய நிதியை வழங்கிவிட்டு தாங்கள் தான் அதில் கரிசனம் உள்ளவர்கள் என்பதைப் போலக் காட்டிக் கொள்கிறார்கள்.

குறிப்பாக நிர்மலா சீதாராமன் அவர்கள் பேசியது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் தம்மைப் பிரதமராக எண்ணிக் கொண்டு பேசுவதைப் போல ஒரு தொனியை வெளிப்படுத்துகிறார். இது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. இதுபோன்ற பேச்சுக்களின் மூலம் தமிழக மக்களின் உணர்வை அவர் காயப்படுத்துகிறார் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: உங்கள் கருத்துக்கான பதிலை பிரதமரிடம் கேட்டுப்பெறுங்கள் - மத்திய நிதியமைச்சருக்கு எம்பி சு.வெங்கடேசன் பதில்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.