ETV Bharat / state

பொதுமக்களை அச்சுறுத்தும் விலங்கு; வனத்துறையினர் தேடுதல் வேட்டை! - சுக்காம்பட்டி

திருச்சி: மணப்பாறை அடுத்த குருமலை வனப்பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் அடையாள தெரியாத விலங்கினை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

strange animal
author img

By

Published : May 18, 2019, 7:35 PM IST

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சுக்காம்பட்டி அருகே அமைந்துள்ளது குருமலை வனப்பகுதி. இப்பகுதி மணப்பாறை மற்றும் துவரங்குறிச்சி வனச்சரகத்தின் எல்லையாக அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியை சுற்றி பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இந்த வனப்பகுதியில் இருந்து அடையாளம் தெரியாத விலங்கு ஒன்று கிராம பகுதிக்குள் புகுந்து செம்மறி ஆடுகளை வேட்டையாடி கொன்று விட்டு தப்பித்து விடுவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து நேற்று இரவு மணப்பாறை வனச்சரகர் நவரத்தினம் தலைமையில், பத்துக்கும் மேற்பட்ட வனத்துறையினர் பொதுமக்களின் உதவியோடு அந்த விலங்கு வந்ததற்கான அடையாளங்கள் ஏதேனும் உள்ளதா, கால் தடம் பதிந்து உள்ளதா என தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

சுக்காம்பட்டி

மேலும் பொதுமக்கள் விலங்கு குறித்து அச்சப்படத் தேவையில்லை. அதை பிடிப்பதற்கான வழிமுறைகளை வனத்துறை கண்டிப்பாக மேற்கொள்ளும் என்று பொதுமக்களிடம் தெரிவித்தனர்.

Intro:மணப்பாறை அடுத்த குருமலை வனப்பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் மர்ம விலங்கு - வனத்துறையினர் தேடுதல் வேட்டை.Body:திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சுக்காம்பட்டி அருகே அமைந்துள்ளது குருமலை வனப்பகுதி. இப்பகுதி மணப்பாறை மற்றும் துவரங்குறிச்சி வனச்சரகத்தின் எல்லையாக அமைந்துள்ளது.இந்த வனப் பகுதியை சுற்றி பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இந்த வனப்பகுதியில் இருந்து மர்ம விலங்கு ஒன்று கிராம பகுதிக்குள் புகுந்து செம்மறி ஆடுகளை வேட்டையாடி கொன்று விட்டு தப்பித்து விடுவதாக எழுந்த புகாரை அடுத்து நேற்று இரவு மணப்பாறை வனச்சரகர் நவரத்தினம் தலைமையிலான பத்திற்கும் மேற்பட்ட வனத்துறையினர் பொதுமக்களின் உதவியோடு மர்ம விலங்கு கிராம பகுதிக்குள் வந்ததற்கான அடையாளங்கள் ஏதேனும் உள்ளதா,கால் தடம் பதிந்து உள்ளதா என தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.மேலும் பொதுமக்கள் மர்ம விலங்கு குறித்து அச்சப்படத் தேவை இல்லை என்றும்,அதை பிடிப்பதற்கான வழிமுறைகளை வனத்துறை கண்டிப்பாக மேற்கொள்ளும் என்றும் பொதுமக்களிடம் தெரிவித்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.