திருச்சி: துபாயில் இருந்து விமானம் மூலம் திருச்சி வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவதாக மத்திய புலனாய்வு அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர்.
அப்போது விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (34) என்பவர் 1.5 கிலோ தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எலக்ட்ரானிக் பொருட்களுக்குள் மறைத்து வைத்து கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இருவர் கைது
இதேபோல் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஷேக் தாவூத் (32) என்பவர் 575 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து சுங்கத்துறை அலுவலர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இருவரிடமிருந்தும் கைப்பற்றப்பட்ட மொத்த தங்கத்தின் மதிப்பு 1 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரூ.60 லட்சம் மதிப்புடைய தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்!