திருச்சி: மணப்பாறை அடுத்த வில்லுக்காரன்பட்டியைச் சேர்ந்த விவசாயி வேலுச்சாமி, விவசாயத்துடன் கால்நடைகளையும் வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு அவரது வெள்ளாடு ஒன்று இரண்டு குட்டிகளை ஈன்றது. அதில் ஒன்று ஓர் உடல், இரு தலைகள், நான்கு கண்கள், இரண்டு மூக்கு, இரண்டு வாய்ப் பகுதிகளை கொண்டிருந்தது.
இரட்டைத்தலை ஆட்டுக்குட்டிக்குப் புட்டி பால்
பொதுவாக பிறந்த சில மணி நேரங்களிலேயே, தாயிடம் பால் குடிக்கும் வழக்கம் ஆட்டுக்குட்டிகளுக்கு உண்டு. ஆனால், இந்த இரட்டைத்தலை ஆட்டுக்குட்டிகள் தலை பாரம் தாங்கமுடியாமல், இரு தலைகளையும் தூக்கிக்கொண்டு நிற்கக்கூட முடியாத நிலையில் உள்ளது.
அதனால் தாயிடம் சென்று பால் குடிக்க முடியாமல் தவித்து வந்தது.
இதைக் கண்டு பரிதாபம் அடைந்த வேலுச்சாமி குடும்பத்தினர், அந்த குட்டிக்கு பாட்டில் மூலம் பால் கொடுத்து வருகின்றனர். மேலும் இதனை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 500 ரூபாய் மீனுக்கு 100 ரூபாய் பெட்ரோல் இலவசம் - கலக்கும் விற்பனை