விடுதலைs சிறுத்தைகள் கட்சிth தலைவர் திருமாவளவன் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. இந்த வகையில் டெல்லியில் நடந்த போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.
கல்வீச்சில் காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படுவதற்கு பிரதமரும், உள்துறை அமைச்சரும் தான் பொறுப்பு. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிடிவாதம் பிடிக்காமல் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.
பாஜகவுக்கு ஆதரவு என்பது அதிமுகவின் தேர்தல் நிலைப்பாடாகும். ஆனால் அவர்கள் அமல்படுத்தும் இதுபோன்ற சட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்தது வரலாற்றுப் பிழையாகும். இதை நியாயப்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு முயற்சி செய்கிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், தமிழ்நாட்டில் குழந்தைகள், பெண்கள் ஆகியோருக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. ஆணவக் கொலைகள், பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்துவருகிறது. இவற்றைத் தடுக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேர் விடுதலை தொடர்பாக அமைச்சரவை மீண்டும் கூடி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி அழுத்தம் கொடுக்க வேண்டும். அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையால் இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சி சரியாகப் போவதில்லை. அவர் வருகைக்காகக் குடிசைகளை மறைக்கும் முயற்சிகள்தான் நடக்கிறது" என்று கூறினார்.
இதையும் படிங்க;
ஜோதிராதித்யா சிந்தியாவுடன் நல்லுறவு தொடர்கிறது - திக் விஜய் சிங்!