திருச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக கடுமையான பனிப்பொழிவு இருந்து வந்தது. இந்நிலையில், இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு குளிர்ந்த காற்றும் வீசியது.
மாலை சுமார் நான்கு மணி அளவில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. பின்னர், வானம் இருள் சூழ்ந்த நிலையில் தற்போது வரை மழை பெய்து வருகிறது.
திருச்சியில் பாலக்கரை, தில்லை நகர், சத்திரம் பேருந்து நிலையம், மத்தியப் பேருந்து நிலையம், கே.கே. நகர், காஜாமலை, எடமலைப்பட்டிபுதூர், சீனிவாச நகர், காந்தி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: 1996-க்குப் பிறகு 2019ஆம் ஆண்டில்தான் இத்தனை புயல்? - சொல்கிறார் பாலச்சந்திரன்