திருச்சி மாவட்டம் முசிறி அருகே பொன்னாங்கன்னிபட்டியில் குட்கா புகையிலைப் பொருள்கள் மொத்த விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில், பாரதிதாசன், மோகன்ராஜ் ஆகியோர் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை மூட்டை மூட்டையாக வீடுகளில் பதுக்கி மொத்தமாக விற்பனை செய்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, உதவி ஆய்வாளர் நாகராஜ் தலைமையிலான காவல் துறையினர் இருவரையும் கைதுசெய்து மூன்று வீடுகளில் இருந்து 32 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருள்களைப் பறிமுதல்செய்தனர்.
இதையும் படிங்க: சைக்கிள் கடையின் சுவரைத் துளையிட்டு ரூ.1.73 லட்சம் பணம் கொள்ளை!