ETV Bharat / state

பேனர் வைத்து நானே நன்றி செலுத்துவேன் - திமுக எம்.எல்.ஏ. மகேஷ்

திருச்சி: நான்கு வழி சாலையில் சர்வீஸ் சாலையை அமைத்துக் கொடுத்தால் அவர்களுக்கு பேனர் வைத்து நானே நன்றி செலுத்துவேன் என திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மகேஷ் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Oct 10, 2020, 5:05 AM IST

Updated : Oct 10, 2020, 7:02 PM IST

திருச்சி - தஞ்சாவூர் சாலை நான்கு வழிச்சாலையாக சில ஆண்டுகளுக்கு முன்பு மாற்றம் செய்யப்பட்டது.

இந்தச் சாலையில் திருச்சி பழைய பால்பண்ணை, அரியமங்கலம், காட்டூர், மலை கோயில், திருவெறும்பூர், பாய்லர் குடியிருப்பு, கைலாசபுரம், துவாக்குடி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 14.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிக குடியிருப்புகள், வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் உள்ளன.
ஆனால் இந்த நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்ட போது இந்த பகுதிக்கு உதவிடும் வகையில் சர்வீஸ் சாலை அமைக்கப்படவில்லை.

இங்கு சர்வீஸ் சாலை அமைக்கப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாக போராடி வருகின்றனர்.
திருச்சி பால்பண்ணை - துவாக்குடி சர்வீஸ் சாலை மீட்பு கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி போராடி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி சர்வீஸ் சாலை அமைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியை கூட மாநில அரசு செய்யவில்லை. அதனால் உடனடியாக நிலத்தை கையகப்படுத்தி சர்வீஸ் சாலை அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி திமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், திருவெறும்பூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் அரியமங்கலம் எஸ்.ஐ.டி பேருந்து நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் சர்வீஸ் சாலை உடனடியாக அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.

இதனால் நான் வெற்றி பெற்ற பிறகு சட்டப்பேரவையில் எனது கன்னிப் பேச்சில் சர்வீஸ் சாலை அமைப்பது தொடர்பாக உரையாற்றினேன்.
இதைத்தொடர்ந்து அதே ஆண்டு நவம்பர் மாதம் டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்து வலியுறுத்தினேன்.

இந்தப் பகுதியில் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் மாநில அரசு அலுவலர்களை பலமுறை சந்தித்து வலியுறுத்தினேன்.
அதேபோல் சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கை வைத்தேன். ஆனால் வழக்கு இருப்பதாக காரணம் காட்டி அவர்கள் இதை செய்ய மறுத்தனர்.
ஆனால் சென்னை மதுரவாயலில் இதேபோல் வழக்கை விரைந்து முடித்து சாலைப் பணியை தொடங்கி விட்டார்கள்.

அதேபோல இந்த சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். மேலும் இங்கு சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி 6 மாத காலக்கெடுவுடன் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

ஆனால் தற்போது வரை நீதிமன்ற உத்தரவை மதித்து சர்வீஸ் சாலை அமைக்கப்பட வில்லை. இப்பிரச்னையை அரசியல் ரீதியாக திசை திருப்ப சிலர் முயற்சிக்கின்றனர். இது மக்கள் பிரச்னை. சமூக வலைதளங்களிலும் இது குறித்து தவறான தகவல் பகிரப்படுகிறது. இந்த ஆட்சியில் இந்த சர்வீஸ் சாலையை அமைத்துக் கொடுத்தால் அவர்களுக்கு பேனர் வைத்து நானே நன்றி செலுத்துவேன்.
கட்சி பாகுபாடு இன்றி நான் இதற்காக முயற்சி செய்து வருகிறேன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் மூன்று மாத காலத்தில் சர்வீஸ் சாலை அமைப்போம் என்று வாக்குறுதி அளித்தோம். ஆனால் மத்தியிலும் மாநிலத்திலும் எங்களது ஆட்சி இல்லாததால் இதை நடைமுறைப்படுத்த முடியாமல் போய்விட்டது.
கண்டிப்பாக இன்னும் 210 நாள்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது நாங்கள் இதை செய்வோம். 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை பிரச்னை விவகாரம் பெரிதாக விவாதிக்கப்படுகிறது.

ஆனால் இந்த சர்வீஸ் சாலை இல்லாததால் இதுவரை 540 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
அதனால் இந்த சர்வீஸ் சாலையில் உள்ள 9 கிராமங்களையும் உள்ளடக்கி நிலங்களை தேர்வு செய்து உரிய தொகை வழங்கி கையகப்படுத்த வேண்டும். அதற்கான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்றார்.
இதில் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் தெற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜன், ஐஜேகே மாநகர இளைஞரணி செயலாளர் குணா, மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Last Updated : Oct 10, 2020, 7:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.