ETV Bharat / state

22.60 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட திருச்சி

திருச்சியில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், மாவட்டத்தில் 22.60 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

trichy district Draft voter list released

author img

By

Published : Nov 16, 2020, 12:36 PM IST

திருச்சி: மாவட்டத்தில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், மணப்பாறை, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் ஆகிய ஒன்பது சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளது. இத்தொகுதிகளில் 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் சிவராசு அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இந்த வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் ஆண்கள் 10 லட்சத்து 99 ஆயிரத்து 977, பெண்கள் 11லட்சத்து 60 ஆயிரத்து 256, மூன்றாம் பாலினம் 206, என மொத்தம் 22லட்சத்து 60 ஆயிரத்து 439 வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் திருச்சி மாவட்டத்தில் 22 லட்சத்து 97 ஆயிரத்து 106 பேர் பட்டியலில் இருந்தனர். இதன் பின்னர் 6ஆயிரத்து 448 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 43ஆயிரத்து 115 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

தற்போதுவெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 22 லட்சத்து 60 ஆயிரத்து 419 பேர் உள்ளனர். பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் எண்ணிக்கையை விட தற்போது வெளியிடப்பட்ட பட்டியலின் எண்ணிக்கையில் 36 ஆயிரத்து 667பேர் குறைவாக உள்ளனர். திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், டிஆர்ஓ பழனி, அதிமுக சார்பில் முன்னாள் கவுன்சிலர் ஐயப்பன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் பத்மநாபன், திமுக சார்பில் மாநகர செயலாளர் அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ் மற்றும் தேமுதிக, பாரதிய ஜனதா கட்சி, மதிமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: நாகை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.