திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பின் தலைமைப் பொறியாளர் அலுவலகக் கூட்ட அரங்கில் காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழுவின் 19ஆவது கூட்டம் தொடங்கியது. நவீன் குமார் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா அரசுகளின் உறுப்பினர்கள், பொதுப்பணித் துறை, தோட்டக்கலைத் துறை அலுவலர்கள், காவிரி நீர் மேலாண்மை ஆணைய உதவி இயக்குநர் மற்றும் தமிழ்நாடு, கேரளா அரசின் முதன்மை ஆலோசகர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
முன்னதாக இந்தக் குழுவினர் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள கல்லணையை நேரில் சென்று ஆய்வு செய்தனர். இக்கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்தில் பாதுகாப்பிற்காக காவல் துறையினரை குவித்துள்ளனர். முதன்முறையாக தமிழ்நாட்டில் திருச்சியில் இந்தக் குழு கூட்டம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மழை வெள்ள அபாய முன்னெச்சரிக்கை ஆலோசனைக் கூட்டம்!