ETV Bharat / state

காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

திருச்சி: மணப்பாறை அருகே காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக உடைப்பு ஏற்பட்டு லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வெளியேறியுள்ளது.

trichy-cauvery-combined-water-pipeline-damaged-might-cause-water-scarcity

author img

By

Published : Jun 14, 2020, 11:59 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை வழியாக குளித்தலையிலிருந்து துவரங்குறிச்சிவரை காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் சுமார் மூன்று அடி விட்டம் கொண்ட குழாய் மூலம் அனுப்பப்படுகிறது.

இந்தக் குழாய், குளித்தலை சாலையில் கலிங்கப்பட்டி பிரிவு சாலை பகுதியில் இன்று திடீரென பழுது காரணமாக உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக, குழாயில் குடிநீர் செல்கின்ற அழுத்ததின் காரணமாக லட்சக்கணக்கான லிட்டர் நீர் வெளியேறி ஓடையில் ஆறாக ஓடியது.

இந்நிலையில் நீர் முழுவதும் வடிந்த பின்னரே குழாய் உடைப்பை சரி செய்ய முடியும் என்றும், குழாய் பழுது நீக்கி மீண்டும் நீர் ஏற்றம் செய்ய ஓரிரு நாட்கள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மணப்பாறை, துவரங்குறிச்சி வரையிலான கிராமப்பகுதிக்கு குடி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

இதையும் படிங்க: கபசுரக் குடிநீர், நொச்சி குடிநீரை விலங்குகளுக்கு கொடுத்து ஆராய்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.