திருச்சி மாவட்டம் கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 300 மையங்களில் தொழிற்சங்கத்தினர் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில், தொழிலாளர்களின் உரிமையை பறித்து மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி, பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நிலைப்பாட்டை மத்திய அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.