ETV Bharat / state

பாலியல் புகாரில் சிக்கிய திருச்சி பேராசிரியர் கைது! - பாலியல் புகார்கள்

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு உறுதியான நிலையில், அவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

Trichy bishop college prof arrested in sexual harassment case
பாலியல் புகாரில் சிக்கிய திருச்சி பேராசிரியர் கைது!
author img

By

Published : Jul 7, 2021, 1:57 PM IST

திருச்சி: திருச்சி பிஷப் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றிவந்தவர், பேராசிரியர் பால் சந்திரமோகன்.

முதுகலை முதலாமாண்டு மாணவர்கள் சிலர், பேராசிரியர் பால் சந்திரமோகன் தங்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கல்லூரி நிர்வாகத்திடம் புகார்களை தெரிவித்தனர்.

இந்தப்புகார் குறித்து விசாரிக்க கல்லூரி நிர்வாகம் அமைத்த விசாரணைக் குழு, பேராசிரியர் மாணவிகளுக்கு பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உண்மைதான் என அறிக்கை சமர்ப்பித்தது.

அதனடிப்படையில், பேராசிரியர் சந்திரமோகனை கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. மேலும், இதுதொடர்பாக சமூக நலத்துறை விசாரணை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவிட்டார்.

இந்தக்குழுவினர் மேற்கொண்ட விசாரணையில் குற்றச்சாட்டுகள் உண்மை எனத் தெரியவந்ததையடுத்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல்நிலைய காவலர்கள் பேராசிரியர் பால் சந்திரமோகன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த உதவிப் பேராசிரியை நளினி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து பால் சந்திரமோகனை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: நீதித்துறை நடுவர் மீது பெண் வழக்குரைஞர் பாலியல் புகார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.