ETV Bharat / state

தடுப்பூசி பீதி: மலை கிராம மக்கள் அச்சத்தால் மருத்துவக் குழுவினர் அதிருப்தி

author img

By

Published : Jun 28, 2021, 2:06 PM IST

வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவக் குழுவினரை கிராம மக்கள் விரட்டியடித்துள்ளனர்.

தடுப்பூசி
தடுப்பூசி

திருச்சி: துறையூர் அருகே தென்புறநாடு பஞ்சாயத்துக்குள்பட்ட பகுதிகளில் சேம்பூர், பெரும்பரப்பு, சித்தூர் உள்ளிட்ட 16 மலை கிராமங்கள் உள்ளன. அவற்றில் நான்காயிரத்து 16 பேர் வசிக்கின்றனர்.

இந்தக் கிராமங்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிக்காக நான்கு மருத்துவக் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால் இந்தக் கிராமங்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்த மறுப்புத் தெரிவித்துவருகின்றனர். தடுப்பூசி குறித்து முழுமையாக விழிப்புணர்வு ஏற்படுத்திய நிலையிலும், அவர்களுக்கு தடுப்பூசி குறித்த பயம் விலகவில்லை.

தடுப்பூசி
தடுப்பூசி

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் விவரம்

இந்தக் கிராமங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தனியார் தொழிற்சாலை ஊழியர்கள், 100 நாள் வேலை திட்டப் பணியாளர்கள் என நிபந்தனை விதிக்கப்பட்டவர்கள் மட்டுமே, வேறுவழியின்றி தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். ஆனால், விவசாய பணிகளில் ஈடுபடுவோர், வேலையிருப்பதாகக் கூறி தட்டிக்கழித்துள்ளனர்.

சிலர் மருத்துவக்குழுவைக் கண்டதும் வீடுகளுக்குள் சென்று ஒளிந்துகொள்கின்றனர். இதைப் புரிந்துகொண்டு மருத்துவக்குழுவினர் இரவு நேரத்தில் சென்று விவசாயிகளை தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். அப்போதும், பெரும்பாலானோர் மறுப்பு தெரிவிக்கவே, ஏமாற்றத்துடன் மருத்துவக் குழுவினர் திரும்புகின்றனர்.

வீணாகும் தடுப்பூசி

ஒரு குப்பியில் உள்ள மருந்தால் 11 பேருக்கு தடுப்பூசி செலுத்திய மருத்துவக் குழுவினர், இங்கு ஐந்து பேருக்கு மட்டுமே செலுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் மருந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மலை கிராம மக்கள் அச்சத்தால் மருத்துவக் குழுவினர் அதிருப்தி

தடுப்பூசி குறித்த மூடநம்பிக்கை

  • கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகர் விவேக் உயிரிழந்ததாக, உதாரணம் காட்டி கிராம மக்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
  • தடுப்பூசி செலுத்தினால் இரண்டு ஆண்டுகளில் உயிரிழப்பு ஏற்படும் என்ற நம்பிக்கையும் பரவலாகக் காணப்படுகிறது.

உரிய நடவடிக்கை

இளைஞர் முதல் வயதானோர் வரை அனைவருமே தடுப்பூசி போட தயக்கம் காட்டுவதால், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மலை கிராமங்களில் முழுமையாகத் தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவடையும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

தடுப்பூசி
தடுப்பூசி

தடுப்பூசி குறித்தும், அதன் மீது அவர்களுக்கு இருக்கும் மூடநம்பிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகியுள்ளது. கரோனா மூன்றாம் அலை உருவாகவுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துவரும் நிலையில், விரைந்து நடவடிக்கை எடுப்பதே உரிய பலனை தரும்.

இதையும் படிங்க: 'திமுகவையும் மின்வெட்டையும் பிரிக்க முடியாது' - நத்தம் விசுவநாதன் கிண்டல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.