ETV Bharat / state

திருச்சி ரயில் நிலையத்தில் மூன்று கோடி தங்கம் பறிமுதல் - திருச்சி ரயில் நிலையத்தில் 3 கோடி தங்கம் பறிமுதல்

திருச்சி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் சோதனையில் பயணிகளிடம் இருந்து ரூ 3 கோடி மதிப்புள்ள 6.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ரயில் நிலையத்தில் மூன்று கோடி தங்கம் பறிமுதல், Three crore gold seized at Trichy railway station

author img

By

Published : Feb 24, 2022, 9:44 AM IST

திருச்சி: காரைக்காலில் இருந்து எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயில் திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்திற்கு நேற்று (பிப்.23) இரவு 7.40 மணிக்கு முதலாவது நடை மேடையில் வந்தது. அப்போது, ரயிலில் பயணிகளின் உடைமைகளைக் குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் சோதனை செய்தனர்.

அப்போது 2 வட மாநிலத்தவர் மற்றும் திருச்சியைச் சேர்ந்த ஒருவரின் உடைமைகளைச் சோதனையிட்டதில் அவர்கள் கொண்டு வந்த பைகளில் இருந்து வளையல், நெக்லஸ், ஆரம், மாலை, நெத்திச்சுட்டி உள்ளிட்ட 6.8 கிலோ எடையுள்ள தங்கத்தைப் பறிமுதல் செய்தனர்.

காவல்துறையினர் விசாரணையில், இதன் சந்தை மதிப்பு 3 கோடி என தெரியவந்தது. இதனையடுத்து திருச்சி அண்ணா நகர் ஹவுசிங் போர்டை சேர்ந்த அருணன், ஹூக்ளியைச் சேர்ந்த அனிர்பன் முகர்ஜி, துர்காபூரைச் சேர்ந்த பிரதீப் முகர்ஜி 3 பேரையும் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி ரயில் நிலையத்தில் மூன்று கோடி தங்கம் பறிமுதல்

மேலும், கைப்பற்றப்பட்ட நகைகள் மதிப்பு குறித்து மாநில வரி அலுவலர் செல்வம், மாநில துணை வரி அலுவலர் சுந்தர்ராஜன் ஆகியோர் கணக்கீடு செய்தனர்.

மூன்று கோடி தங்கம் பறிமுதல்
மூன்று கோடி தங்கம் பறிமுதல்

இதையும் படிங்க: வந்தது வலிமை - திரையரங்குகளில் திருவிழா!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.