ETV Bharat / state

திருச்சி மக்களவைத் தொகுதியில் திருநாவுக்கரசர் வெற்றி

திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் இளங்கோவனைவிட நான்கு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார்.

திருநாவுகரசர் வெற்றி
author img

By

Published : May 23, 2019, 3:32 PM IST

காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் விபரம்

பெயர்: திருநாவுகரசர்
கட்சி : காங்கிரஸ்
வயது : 60

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை அடுத்த தீயத்தூர் கிராமத்தில் பிறந்த திருநாவுக்கரசர் மாணவப் பருவத்தில் அரசியலுக்கு வந்தார். முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியாக இருந்தவருக்கு, 1977 தேர்தலில் அறந்தாங்கி தொகுதி ஒதுக்கப்பட்டது. அப்போது இருந்து தொடர்ந்து ஆறு முறை அறந்தாங்கி தொகுதியில் வெற்றி பெற்றார். ஒரே தொகுதியில் தொடர்ந்து 6 முறை வென்றவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

1999 மக்களவைத் தேர்தலில் புதுக்கோட்டையில் வெற்றிபெற்று எம்.பி.யானார். இவரது திருமணவிழாவில் அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த எம்.ஜி.ஆர். - கருணாநிதி-மூப்பனார் ஆகியோர் கலந்துகொண்டது ஹைலைட். இவருக்கு இரண்டு மனைவிகள், ஐந்து பிள்ளைகள். 28 வயதில் சட்டப்பேரவைத் துணை சபாநாயகர் ஆனார். அமைச்சர், அ.தி.மு.க இளைஞரணிச் செயலாளர் என எம்.ஜி.ஆர் கொடுத்த பொறுப்புகளில் திறம்படச் செயலாற்றியவர்.

`சின்ன எம்.ஜி.ஆர்' என்றெல்லாம் அழைக்கப்பட்ட இவர், அரசியல் முரண்பாடுகளால் இரண்டு முறை தனிக் கட்சியைத் தொடங்கினார். பின்னர், பா.ஜ.கவில் சேர்ந்து மத்திய இணை அமைச்சரானார். சில வருடங்களுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த திருநாவுக்கரசருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியும் தேடி வந்தது.

இந்நிலையில், திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை நான்கு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னுக்கு தள்ளி வெற்றிப் பெற்றார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.