ETV Bharat / state

"எதிரியே இல்லாத இழிவான அரசியல் களத்தை உருவாக்க பாஜக முயற்சி" - திருமாவளவன்! - Trichy

ராகுல் காந்தியை தேர்தலில் நிற்கவிடாமல் தடுத்து எதிரியே இல்லாத தேர்தல் களத்தை சந்திக்கிற, மிகவும் இழிவான ஒரு அரசியலை பாஜக கையில் எடுத்துள்ளது எனவும், இதைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளாதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

Thirumavalavan MP said BJP has taken up the disgraceful politics of facing an election field where there is no enemy
எதிரியே இல்லாத தேர்தல் களத்தை சந்திக்கிற, இழிவான அரசியலை பாஜக கையில் எடுத்துள்ளது என திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்
author img

By

Published : Mar 26, 2023, 8:58 AM IST

VCK Party Leader Thirumavalavan Press meet

திருச்சி மாநகர ஆர்.சி, சி.எஸ்.ஐ, டி.இ.எல்.சி திருச்சபைகளின் பொது நிலையினர் பேரவைகள் இணைந்து நடத்திய சமூக அரசியல் ஆய்வரங்கம் திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "அதானி என்ற ஒருவரை காப்பாற்றுவதற்காக ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் முடக்குகின்ற மிகவும் அற்பமான ஒரு அரசியலை பாஜக செய்து கொண்டிருக்கின்றது. அதானியை விமர்சித்த காரணத்தினால், அதானி மீதான பங்கு சந்தை ஊழல் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என்று தெரிவித்ததால் ராகுல் காந்தியின் பதவியை பறிக்க, மிகக் கேடான அரசியலை, எதேச்சதிகார அரசியலை பாஜக அரசு செய்து வருகிறது.

மோடி என்கிற தனிநபரை மையமாக வைத்து தேர்தல் பிரசாரத்தில் பேசியதை, மோடி சமூகத்திற்கு எதிராக பேசியதாக ஒருவர் தொடுத்த அவதூறு வழக்கில் அரசியல் தலையீடு செய்து இரண்டு ஆண்டுகள் தண்டனை வழங்க வைத்து அவரை பதவி பறிப்போகும் நிலைக்கு தள்ளி உள்ளனர். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட அரசியல் சதி. இது எந்த வகையிலும் ராகுல் காந்தியை பாதிக்காது.

ஆனால் ராகுல் காந்தியை தேர்தலிலே நிற்கவிடாமல் தடுத்து எதிரியே இல்லாத தேர்தல் களத்தை சந்திக்கிற, மிகவும் இழிவான ஒரு அரசியலை பாஜக கையில் எடுத்துள்ளது. இது வன்மையாக கண்டனத்திற்குரியது. விடுதலைகள் சிறுத்தைகள் கட்சி சார்பில் இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். தேதியை பின்னர் அறிவிப்போம். நாடாளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆகவே சென்னையில் எனது தலைமையில் மோடி அரசின் இந்த ஜனநாயக விரோத போக்கை, பாசிச போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்றார்.

ராகுல் காந்தி விவகாரத்தில் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது குறித்த கேள்விக்கு, "எங்களுக்கு முறையான அறிவிப்பு எதுவும் வரவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி தனியே ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. ராகுல் காந்தி அவர்கள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. பின் வாங்க தேவையில்லை. நாட்டின் ஒற்றுமைக்காக அவர் தனது பயணத்தை தொடங்கி இருக்கிறார். இந்திய ஒற்றுமை பயணத்தின் மூலம் இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். பாஜகவையும், மோடியையும் அவர் இந்திய ஒற்றுமை பயணத்தின் மூலம் அம்பலப்படுத்தி இருக்கிறார்.

அவர் ஒரு நல்ல நோக்கத்திற்காக, இந்தியாவையும், அரசியல் அமைப்பு சட்டத்தையும் பாதுகாப்பதற்காக, பாசிச சக்திகளை எதிர்த்து போரிடுகிறார். அவருடைய போராட்டம் மேலும் ஓங்கி செல்ல வேண்டும். ஜனநாயக சக்திகள் அவருக்கு துணை இருக்கும். அவருடைய இந்த போராட்டம் வெல்லும்" எனத் தெரிவித்தார்.

கச்சத்தீவில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, "கச்சத்தீவு தொடர்ந்து பிரச்சனைக்கு உள்ளான ஒன்றாகவே உள்ளது. அதில் சிங்களர்கள் அத்துமீறி நடந்து கொள்கின்றனர். கிறிஸ்தவர்கள் நடத்துகின்ற விழாவில் குளறுபடிகளை செய்வது, வன்முறையை தூண்டுவது, போன்ற நடவடிக்கைகளில் சிங்களர்கள் ஈடுபடுவது வன்மையான கண்டனத்துக்குரியது. இந்திய அரசு இந்த விரோத நடவடிக்கைகளை கண்டிப்பதே இல்லை" என்றார்.

காங்கிரஸ் அல்லாத கூட்டணி குறித்த முயற்சியில் மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளது குறித்த கேள்விக்கு, "மம்தா பானர்ஜி காங்கிரஸ் அல்லாத கூட்டணியை உருவாக்க வேண்டும் என முயற்சித்தால் அது அவருக்கும் நல்லதல்ல, நாட்டிற்கும் நல்லதல்ல. மிகவும் ஆபத்தான பாசிச சக்தியான பாஜகவிற்கு இது பயன் தரக்கூடியதாக அமைந்துவிடும். மம்தா அவர்கள் தொலைநோக்கு பார்வையுடன் நாட்டு நலன் கருதி பாசிச சக்திகளை வீழ்த்துவதற்கு காங்கிரசோடு இணைந்து 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற பொது தேர்தலை சந்திக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுகிறது.

இரண்டாவது முறையாக ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் சட்டத்தை முதலமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். அந்த சூதாட்டத்தை தடை செய்ய ஆளுநர் தயாராக இல்லை. அது அவருடைய நிலைப்பாடு அல்ல, பாஜக அரசின் நிலைப்பாடு. இதிலிருந்து பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் இவர்கள் இந்துக்களின் அல்லது பொது மக்களின் நலனுக்கானவர்கள் அல்ல என்பதை. இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டிருக்கும் இந்த மசோதாவை ஆளுநர் சட்டப்படி திருப்பி அனுப்ப முடியாது அதனை அவர் அங்கீகரித்து தான் ஆக வேண்டும், பொறுத்திருந்து பார்ப்போம்" என்று திருமாவளவன் கூறினார்.

இதையும் படிங்க: காங்கிரஸ் கட்சிக்கு தைரியம் இருந்தால் என் மீது வழக்கு போடட்டும் - குஷ்பு ஆவேசம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.