திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த விசுவாம்பாள் சமுத்திரம் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் புகழேந்தி. இவர் அந்த பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது வழக்கம் போல நேற்று (ஜூன் 02) காலை கூலி வேலைக்கு சென்று விட்டு மாலை நண்பர்களுடன் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார் அப்பொழுது வீட்டில் இருந்த தனது மனைவி சுஜாதாவிடம் குடி போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஊரில் நடைபெறும் திருவிழாவிற்காக சேலத்தில் இருந்து புகழேந்தியின் மகன் சுரேந்தர் கடந்த 20 தினங்களுக்கு முன்பு சொந்த ஊரான துறையூர்க்கு வந்துள்ளார்.
தினமும் வீட்டில் தாயிடம் குடித்து விட்டு தந்தை சண்டையிடுவதை கண்டு நேற்று (ஜூன் 02) வீட்டில் இருந்த மகன் சுரேந்தர் தந்தை புகழேந்தியிடம் ஏன் குடித்து விட்டு தினமும் தகராறு செய்கிறீர்கள் என திட்டியுள்ளார். இதனையடுத்து அவர்கள் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் தந்தை மகன் இருவருக்கும் இடையே தகராறு முற்றியுள்ளது. இதற்கிடையில் உள்ளுரில் திருமணம் செய்து கொடுத்துள்ள மகளை அழைத்து வர சுஜாதா சென்றுள்ளார். சுஜாதா வெளியே சென்ற சிறிய இடைவெளியில் தந்தை, மகன் இருவருக்கும் மோதல் முற்றி அம்மி கல்லால் தந்தை புகழேந்தியை அடித்து மகன் சுரேந்தர் கொலை செய்துள்ளார்.
இதையும் படிங்க: வங்கிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் மொபைல் எண்களுக்கு குறி.. நைஜீரிய சைபர் கிரைம் கும்பல் சிக்கியது எப்படி?
சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த சுஜாதா அப்போது தனது கணவன் பூகழேந்தி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து இந்த கொலை சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் அம்மிக்கல்லால் அடித்தும், கத்தியால் குத்தியும் புகழேந்தி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் பற்றி துறையூர் உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேந்தரை கைது செய்தனர். மேலும் இறந்து போன புகழேந்தியின் உடலை மீட்ட போலீசார் உடற்கூறு ஆய்விற்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடி போதையில் தகராறு செய்த தந்தையை பெற்ற மகனே அம்மி கல்லால் அடித்து கொன்ற சம்பவம் துறையூர் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: Odisha Train accident: 'கடவுள் கொடுத்த மறு பிறவி'... ரயில் விபத்தில் தப்பிய குடும்பம் உருக்கம்!