ETV Bharat / state

முதலமைச்சர் பதவிக்காக எடப்பாடி தவழ்ந்தது அனைவருக்கும் தெரியும் - டிடிவி சாடல் - திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி: முதலமைச்சர் பதவிக்காக எடப்பாடி பழனிசாமி தவழ்ந்தது அனைவருக்கும் தெரியும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

டிடிவி தினகரன் பேட்டி
author img

By

Published : Nov 22, 2019, 3:01 PM IST

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், 'உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பது தொடர்பாக இன்று கட்சியினருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்ற எண்ணம் தமிழ்நாடு அரசுக்கு இருந்திருந்தால் எப்போதோ நடந்தியிருப்பார்கள். தற்போது எப்படியாவது யார் மூலமாவது தேர்தலை நிறுத்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் மேயர், நகராட்சித் தலைவர் போன்ற பதவிகளுக்கு நேரடி தேர்வு முறை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவை ஏதோ திட்டமிட்டு செயல்படுவதுபோல் தெரிகிறது. எனினும் இப்போது தேர்தல் வந்தாலும் எங்களது தொண்டர்கள் தயாராக உள்ளனர். பதிவு பெற்ற கட்சி தொடர்பான வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு நிரந்தர சின்னம் கேட்டு போட்டியிடுவோம். சின்னம் தந்தாலும், தராவிட்டாலும் சுயேட்சையாக போட்டியிட தொண்டர்களும் நிர்வாகிகளும் தயாராக உள்ளனர்.

எங்களது நோக்கம் அடுத்த பொதுத் தேர்தலை சந்திப்பதுதான். அதனால்தான் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. உள்ளாட்சித் தேர்தல் தற்போது வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஒரு கட்சி தோல்வி அடைந்ததால் அந்த கட்சியே இல்லை என்று முடிவு செய்ய முடியாது.

டிடிவி தினகரன் பேட்டி

வரும் தேர்தலில் மக்கள் எங்களுக்கு மாபெரும் ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. எதிரி திமுக, துரோகி எடப்பாடி பழனிசாமி குழுவினர்.

2016 ஜனவரியில் முதலமைச்சர் ஆவேன் என்று எடப்பாடி பழனிசாமி நினைத்திருக்க மாட்டார். கை குழந்தையை போல் தவழ்ந்து வந்து பதவி பெற்றது அனைவருக்கும் தெரியும்’ என்றார்.

இதையும் படிங்க:தோல்வி பயத்தால் அதிமுக அரசு மேயர் சட்டம் கொண்டுவந்துள்ளது - பாலகிருஷ்ணன்

Intro:உள்ளாட்சி தேர்தலை நடத்தும் எண்ணமே தமிழக அரசுக்கு இல்லை என்று டிடிவி தினகரன் கூறினார். Body:Visual will sent in next file...

திருச்சி:
உள்ளாட்சி தேர்தலை நடத்தும் எண்ணமே தமிழக அரசுக்கு இல்லை என்று டிடிவி தினகரன் கூறினார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது முன்னதாக அக் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பது தொடர்பாக இன்று கட்சியினருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு இருந்திருந்தால் எப்போதோ நடந்தியிருப்பார்கள். தற்போது எப்படியாவது? யார் மூலமாவது தேர்தலை நிறுத்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மேயர், நகராட்சித் தலைவர் போன்ற பதவிகளுக்கு நேரடி தேர்வு முறை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவை ஏதோ திட்டமிட்டு செயல்படுவது போல் தெரிகிறது. எனினும் இப்போது தேர்தல் வந்தாலும் எங்களது தொண்டர்கள் தயாராக உள்ளனர். பதிவு பெற்ற கட்சி தொடர்பான வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு நிரந்தர சின்னம் கேட்டு போட்டியிடுவோம். சின்னம் தந்தாலும், தராவிட்டாலும் சுயேட்சையாக போட்டியிட தொண்டர்களும் நிர்வாகிகளும் தயாராக உள்ளனர். தேர்தலை நடத்த தயாராக இல்லை. எங்களது நோக்கம் அடுத்த பொதுத் தேர்தலை சந்திப்பது தான் எங்களது நோக்கம். அதனால் தான் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. உள்ளாட்சித் தேர்தல் தற்போது வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஒரு கட்சி தோல்வி அடைந்ததால் அந்த கட்சியே இல்லை என்றி முடிவு செய்ய முடியாது. அழைக்காமலேயே தொண்டர்கள் கூட்டத்திற்கு வந்துள்ளனர். தேர்தலில் போட்டியிட தொண்டர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தல் நடத்த செயல்வீரர்கள் கூட்டத்தை எல்லாம் முதல்வர் நடத்தினார். ஆனால் தலைமைச் செயலாளரை விட்டு ரெட்அலர்ட் மூலம் தேர்தலை நிறுத்திவிட்டனர். அவர்கள் எப்படி வேண்டுமானாலும் செயல்படுவார்கள். தேர்தலை நடத்துவதில் அவர்களுக்கு ஈடுபாடு இல்லை என்பதே உண்மை. ஜனநாயக நாட்டில் அனைவரும் கட்சி தொடங்கலாம். அதனால் நாங்கள் யாரையும் சவாலாக நினைக்கவில்லை. எங்களது எதிரிகளையும், துரோகிகளையும் அரசியலிலே தோற்கடித்து ஆட்சிக்கு வர விடாமல் செய்வது தான் எங்களது திட்டம்.
அதற்காக முழு மூச்சாக செயல்படுகிறோம். வரும் தேர்தலில் மக்கள் எங்களுக்கு மாபெரும் ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. எதிரி திமுக, துரோகி எடப்பாடி பழனிச்சாமி குழுவினர்.
2014 ஜனவரியில் முதல்வர் ஆவேன் என்று எடப்பாடி பழனிச்சாமி நிலைத்திருக்க மாட்டார். கைக் குழந்தையை போல் தவழ்ந்து வந்து பதவி பெற்றது அனைவருக்கும் தெரியும். நிச்சயம் மாற்றம் வரும். அதைதான் ரஜினிகாந்தும் தெரிவித்துள்ளார். திமுகவிற்கு மக்களிடம் அங்கீகாரம் இல்லை. எதிர்பாராதவிதமாக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விட்டார்கள் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.