ETV Bharat / state

அமைச்சர் கே.என்.நேரு - திருச்சி சிவா ஆதரவாளர்களிடையே மோதல்.. திருச்சி திமுகவில் பரபரப்பு! - Supporter of DMK Minister

திருச்சி திமுக எம்.பி., வீட்டில் திமுக அமைச்சரின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை கிளப்பியுள்ளது.

Supporter of DMK Minister KN Nehru vandalized the house of DMK MP Trichy Siva
திமுக எம்பி திருச்சி சிவா வீட்டை சேதப்படுத்திய திமுக அமைச்சர் கே.என்.நேரு ஆதரவாளர்கள்
author img

By

Published : Mar 15, 2023, 11:28 AM IST

Updated : Mar 15, 2023, 4:25 PM IST

அமைச்சர் கே.என்.நேரு - திருச்சி சிவா ஆதரவாளர்களிடையே மோதல்

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தொடங்க உள்ள திட்டப் பணிகளையும், முடிவுற்ற திட்டப் பணிகளையும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார். இந்நிலையில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கண்டோன்மெண்ட் எஸ்.பி.ஐ. காலணியில் நமக்கு நாமே திட்டத்தில், நவீன இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கத்தை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு குத்து விளக்கேற்றித் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, ஸ்டாலின் குமார், நகர பொறியாளர் சிவபாதம், மண்டல தலைவர்கள், மாநகராட்சி உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பங்கேற்பவர்கள் பட்டியலில் ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவாவின் பெயர் இடம் பெறவில்லை. இந்நிலையில் அவரது வீடு உள் நியூ ராஜா காலனி வழியாக தான், அந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சென்றுள்ளனர். அரசுத் திட்டத்தில் விளையாட்டு அரங்கம் துவக்க விழாவில், ராஜ்யசபா எம்.பி., ஆன சிவாவுக்கு அழைப்பு விடுக்காதது, அவரது ஆதரவாளர்கள் தரப்பில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதனால், அமைச்சர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சென்ற போது, சிவாவின் ஆதரவாளர்கள் கறுப்புக் கொடி காட்டி உள்ளனர்.

ஆகையால் அமைச்சரும் அவருடன் சென்றவர்களும் வாகனங்களை நிறுத்தாமல் சென்றுவிட்டனர். இறகுப்பந்து விளையாட்டு அரங்கம் திறப்பு விழா முடிந்து, அமைச்சர் புறப்பட்டுச் சென்றதும், அவரோடு வந்த ஆதரவாளர்கள் எம்.பி. சிவாவின் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த கார் மற்றும் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அமர்வு நீதிமன்றம் காவல் நிலைய போலீசார், திருச்சி சிவாவின் கார், வீட்டைச் சேதப்படுத்திய மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் உட்பட ஆதரவாளர்கள் 12 பேரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். திருச்சியில் திமுக எம்.பி. வீட்டில் திமுக அமைச்சரின் ஆதரவாளர்களே புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை பெரும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் திமுக கட்சியில் நீண்ட ஆண்டு காலமாக இருக்கும் அமைச்சர் கே.என்.நேருக்கும், திருச்சி சிவா விற்கும் ஏற்பட்ட மோதல் அக்கட்சியின் மத்தியில் பெரும் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த தாக்குதலுக்கு கட்சியில் நிலவும் உட்கட்சிபூசல் காரணமாக இருக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு கிளம்பியுள்ளது.

இதையும் படிங்க: திருநெல்வேலி மேயர் மாற்றமா..? சென்னை நோக்கி படையெடுத்த திமுக கவுன்சிலர்கள்.. நெல்லை திமுகவில் நடப்பது என்ன?

Last Updated : Mar 15, 2023, 4:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.