திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 14 ஊராட்சி ஒன்றியங்களில் டிசம்பர் 27 ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் வாக்குப் பதிவானது ஆறு ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்றது. அப்போது 76.18 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.
தற்போது இரண்டாம் கட்ட வாக்குப் பதிவானது லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, புள்ளம்பாடி, தாத்தையங்கார்பேட்டை, தொட்டியம், துறையூர், உப்பிலியபுரம் ஆகிய எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்றது. லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 198 வாக்குச் சாவடிகளும், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 217 வாக்குச் சாவடிகளும், முசிறி ஊராட்சி ஒன்றியத்தில் 162 வாக்குச் சாவடிகளும், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் 147 வாக்குச் சாவடிகளும், தாத்தையங்கார் பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 132 வாக்குச் சாவடிகளும், தொட்டியம் ஊராட்சி ஒன்றியத்தில் 171 வாக்குச் சாவடிகளும், துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் 177 வாக்குச் சாவடிகளும், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 13 சாவடிகளும் அமைக்கப்பட்டன.
பதற்றமான 105 வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் சிவராசு பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சிவராசு கூறுகையில், "திருச்சி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவானது அனைத்து வாக்குச் சாவடிகளிலும் திட்டமிட்டப்படி தொடங்கி நடைபெற்று, சுமுகமாக முடிந்தது" என்றார்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியின்றி தேர்வானவர்கள் முதலமைச்சரிடம் வாழ்த்து