திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளான மார்ச் 1ஆம் தேதி வெகு விமர்சையாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் அன்னதானம், நலதிட்ட உதவிகள் என திமுகவினர் நடத்தினர்.
அவரின் பிறந்தநாளில் புதுமையாக ஏதும் செய்ய நினைத்த திருச்சி திமுகவினர், மு.க. ஸ்டாலினின் செயல்பாடுகளை எடுத்துக்கூறும் வண்ணம் "திராவிடன் லீடர்" என்ற தலைப்பில் புதிய பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்தப் பாடலை அசோக் ராஜா, ரவிந்த் ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்து தயாரித்து உள்ளனர்.
இந்தப் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட திமுக முதன்மைச் செயலா் கே.என். நேருவின் மகன் கே.என்.என். அருண் நேரு சிடியை வெளியிட, அதை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் பெற்றுக் கொண்டார்.
இதுகுறித்து அசோக் ராஜா கூறுகையில், "இந்த பாடலை மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பரிசாக வெளியிட்டுள்ளோம். மேலும், அவரை சந்தித்து இப்பாடலை ஒலிக்க செய்து ரசிக்க வைப்போம்" என்றார்.
இதையும் படிங்க: சி.ஏ.ஏ.விற்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - கவுதமன்