ETV Bharat / state

திருப்பதி கோயிலில் இருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு வஸ்திர மரியாதை

author img

By

Published : Dec 4, 2022, 11:06 PM IST

திருப்பதி கோயிலில் இருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் மற்றும் தாயாருக்கு வஸ்திர மரியாதை இன்று செலுத்தப்பட்டது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் தாயாருக்கு வஸ்திர மரியாதை

திருச்சி: கி.பி 1320 முதல் 1370 வரையிலான ஆண்டுகளில் முஸ்லிம் படையெடுப்பின்போது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் சூறையாடப்பட்ட நிலையில், நம்பெருமாள் திருப்பதி திருமலையில் சுமார் 50 ஆண்டு காலம் எழுந்தருளியிருந்தார்.

இதனை நினைவுகூரும் வகையில் 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திற்கு ஆந்திர மாநிலம், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து ஆண்டுதோறும் கைசிக ஏகாதசியன்று ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு வஸ்திர மரியாதை செய்யும் வைபவம் நடத்தப்பட்டு வருவது வழக்கம்.

அதன்படி கைசிக ஏகாதசியை முன்னிட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமிக்கும், உற்சவர் நம்பெருமாளுக்கும் பட்டு வஸ்திரங்கள் மற்றும் அரங்கநாயகி தாயாருக்கு பட்டு புடவைகள், மாலை மற்றும் மங்களப்பொருட்கள் கொண்டு வந்திருந்தனர்.

இதனை திருமலை திருப்பதி அறங்காவலர் குழு தலைவர் மனைவி சொர்ணலதா ரெட்டி, தேவஸ்தான கண்காணிப்பாளர் உமாமகேஸ்வர்ரெட்டி தலைமையில் எடுத்து வந்து ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, தலைமை பட்டாச்சார்யார் சுந்தர் பட்டர் மற்றும் அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.

முன்னதாக நம்பெருமாளுக்கான வஸ்திரங்களை கோயில் யானை ஆண்டாள் மீது வைத்து, கோவில் வளாகத்திலிருந்து புறப்பட்டு உள்பிரகாரங்களில் வலம் வந்து, மீண்டும் கோவிலை அடைந்தனர். பின்னர் இந்த வஸ்திரங்களை நம்பெருமாளுக்கும், தாயாருக்கும் அணிவிக்கப்பட்டது.

இதில் ஸ்ரீரங்கம் கோவில் அலுவலர்கள், திருப்பதி தேவசம்போர்டு அதிகாரிகள், அறநிலையத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருப்பதியில் இருந்து நம்பெருமாளுக்கு 365 நாட்களுக்கான வஸ்திர மரியாதை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் திட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் போராட்டம்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.