ETV Bharat / state

ஸ்ரீரங்கம் தைத்தேர் திருவிழா - ஊர் கூடி தேர் இழுக்க முடியாது!

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் பூபதித் திருநாள் எனப்படும் தைத்தேரோட்டத் திருவிழாவும் ஒன்றாகும்.

ஸ்ரீரங்கம் தைத்தேர் திருவிழா
ஸ்ரீரங்கம் தைத்தேர் திருவிழா
author img

By

Published : Jan 14, 2022, 2:35 PM IST

திருச்சி: தமிழ்நாட்டில் கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாள்களுக்குப் பக்தர்கள் வழிபடத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஊர்கூடித் தேர் இழுப்போம் என்பார்கள், பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கமே காண்பதற்கு என்றென்றும் ஆனந்தமே, ஆமாங்க வருடம் 365 நாள்களும் ஏதாவது ஒரு திருவிழா நடைபெற்றுக்கொண்டே இருக்கும். இத்திருக்கோயிலில் அனைத்து விழாக்களும் ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் சிறப்பு என்றே சொல்லலாம், அந்த வகையில் தைத்தேர் உற்சவம் கோயிலுக்குள் நடந்துவருகிறது.

ஸ்ரீரங்கம் தைத்தோ் திருவிழா
ஸ்ரீரங்கம் தைத்தோ் திருவிழா

உற்சவத்தின் முக்கிய நிகழ்வான தைத்தேர் வருகின்ற 17ஆம் தேதி நடைபெற வேண்டும், ஆனால் கரோனா தொற்று காரணமாக கட்டுப்பாட்டுடன்கூடிய வகையில் இம்முறை தேரோட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியரின் கடிதம் வெளியாகி இருக்கிறது.

ஸ்ரீரங்கம் தைத்தோ் திருவிழா
ஸ்ரீரங்கம் தைத்தோ் திருவிழா

அதில் வருகின்ற 17ஆம் தேதி அதிகாலை 4.30 மணியிலிருந்து 7 மணிக்குள் 50 பேருக்கு மிகாமல் நிலைத்தேராக ஆகம விதிகளுக்குள்பட்டு விழாவினை நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே வெளியூரிலிருந்து தேர்த் திருவிழாவில் பங்கேற்க வரும் பக்தர்கள் சோகத்தில் ஆழ்ந்திருந்தாலும் உள்ளூர் பக்தர்கள் நிலைத்தேராக மட்டுமாவது கண்டுகளிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.