திருச்சி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பிறந்த நாளையொட்டி சமூகநீதிக் சமூகங்களின் ஒற்றுமை என்னும் தலைப்பில் கருத்தரங்கு, திருச்சி கருமண்டபம் எஸ்.பி.எஸ். மஹாலில் நடைபெற்றது.
இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இக்கருத்தரங்கில் வளர்பிறை என்னும் ஒலிப்பேழை குறுந்தட்டை அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். அதனை விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த அப்துல் ஹமீது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருச்சி வேலுசாமி, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இந்திரஜித், தமுமுக பொதுச்செயலாளர் ஹாஜாகனி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதையும் படிங்க: போட்றா வெடிய... ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்ற ராஜஸ்தான் முதலமைச்சர்!