ETV Bharat / state

முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி போராட்டம் - கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலைக் கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் எஸ்டிபிஐ கட்சி மாநில துணை தலைவர் அப்துல் ஹமீது கூறினார்

முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - எஸ்டிபிஐ

author img

By

Published : Mar 23, 2023, 5:26 PM IST

முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி போராட்டம்

திருச்சி: தமிழ்நாடு அரசு 161வது சட்டப்பிரிவை பயன்படுத்தி முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரி திருச்சி தெற்கு மாவட்டம் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மரக்கடை பகுதியில் நேற்று கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்டிபிஐ கட்சி தெற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை தலைவர் அப்துல் ஹமீது மற்றும் திருச்சி மண்டல தலைவர் ஹஸ்ஸான் பைஜி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

எஸ்டிபிஐ கட்சி மாநில துணை தலைவர் அப்துல் ஹமீது செய்தியாளர்களிடம் பேசுகையில், ”நீண்ட நாட்களாக தமிழ்நாட்டு சிறைச் சாலையில் இருக்கும் முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகளை தமிழ்நாடு அரசு கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வலியுறுத்தி கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம்.

முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை என்பது நீண்ட நாட்களாக தமிழ்நாடு முழுவதும் பேசக்கூடிய விஷயமாக உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்ட பிறகு முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்வதில் எந்த சட்ட விதிகளையும் காரணம் சொல்லாமல் முதலமைச்சரின் நேரடி அனுமதியில் விடுதலைக்கான அனைத்து ஆயத்த வேலைகளை செய்ய முடியும் என்கிற சூழல் உள்ளது.

தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்வதில் காலம் தாழ்த்துவதாக எங்களுக்கு தோன்றுகிறது. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநாட்டில் சிறைவாசிகள் விடுதலை குறித்து முன் வைக்கப்பட்ட தீர்மானத்தில் கூட ‌முதலமைச்சர், ஆதிநாதன் குழுவை விரைவாக ஆளுநருக்கு அனுப்புவோம்; இஸ்லாமியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என சொல்கிறார்.

இவ்வாறு காலம் தாழ்த்துவது முற்றிலும் இஸ்லாமியர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஏற்கனவே பல்வேறு விஷயங்களில் ஆளுநரோடு சண்டையிடும் தமிழ்நாடு அரசும், முதலமைச்சரிடம் நீண்ட நாள் கோரிக்கையாக வைக்கப்பட்ட முஸ்லீம் சிறைவாசிகள் விஷயத்தை ஆளுநருக்கு அனுப்புகிறேன் என்றால் அது எந்த விதத்தில் வெற்றியாகும் என்பது கேள்விக்குறி என்பதால் வாதத்தை முன் வைக்கிறோம்.

இஸ்லாமியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஆயுள் சிறைவாசிகளின் விடுதலை விஷயத்தில் குறைந்தபட்சம் இப்போதாவது கூட உள்ள சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசு முன் வர வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி குறைந்தபட்ச கோரிக்கையாக முன் வைக்கிறது’’ என்று தெரிவித்தார்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் தமீம் அன்சாரி, திருவெறும்பூர் தொகுதி தலைவர் அப்பாஸ் மந்திரி, மேற்கு தொகுதி தலைவர் சிராஜ், மாவட்ட செயலாளர்கள் மதர் ஜமால் முகமது, உள்பட நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் ஜமாத்தார்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: திருச்சி மாநகராட்சியில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.