திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பஞ்சப்பிரகார விழா மே 6ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெறும் ஐந்து பெரும் உற்சவங்களில் பஞ்சப்பிரகார விழா என்பது வசந்த உற்சவம் ஆகும். மாயா சூரனை சம்ஹரிக்க பராசக்தி மகாமாரி வடிவமெடுத்த இத்தலத்தில் அக்னி நட்சத்திரத்தில் விஷ்ணுகிராந்தி தணிப்பதற்காக இவ்விழா நடைபெறும்.
இந்நிலையில், பஞ்ச பிரகார விழாவின் 14ஆம் நாளில் அம்மன் வெள்ளிக் குதிரை வாகனத்தில் வசந்த மண்டபத்தில் இருந்து புறப்பட்டு சன்னதி வீதிகளிலும், தேரோடும் வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனின் அருள் பெற்றுச்சென்றனர்.