ETV Bharat / state

"அண்ணாமலையின் புகார்களுக்கு பதில் சொல்ல தயார்" - ஆர்.எஸ்‌.பாரதி

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் புகார்களுக்கு வரிக்கு வரி பதில் சொல்ல திமுக தயாராக உள்ளது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

r.s.bharathi
ஆர்.எஸ்‌.பாரதி
author img

By

Published : Jul 27, 2023, 8:23 AM IST

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் புகார்களுக்கு வரிக்கு வரி பதில் சொல்ல திமுக தயாராக உள்ளது

திருச்சி: திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது, "வருகிற 2024இல் நடைபெறும் லோக்சபா தேர்தலுக்கான டெல்டா மாவட்டங்களின் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் மாநாடுபோல் திருச்சியில் நடந்து முடிந்துள்ளது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் எழுச்சியோடு பேசியுள்ளார். அதன் மூலம் இன்று முதல் நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுகவின் பணிகள் தொடங்கி விட்டன. இந்த கூட்டம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது.

கடந்த, 2019‌ஆம் ஆண்டுபோல் மோடி எதிர்ப்பு அலை தமிழ்நாட்டில் வீசுகிறது. திமுக கூட்டணி தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் சூழல் உள்ளது. இதனால் மக்களின் கவனத்தை திசை திருப்ப, சிலர் திமுகவுக்கு எதிரான வேலைகளை செய்து கொண்டுள்ளனர். அதற்கெல்லாம் திமுக ஒரு போதும் அஞ்சாது.

மகளிர் அணி ஆர்ப்பாட்டம், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகளால் திமுக மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள எழுச்சியை திசை திருப்ப பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு ஆளுநரிடம் புகார் கொடுத்துள்ளார். அவர் என்ன கொடுத்துள்ளார் என்று தெரியவில்லை. அவருடைய மனுவில் குறிப்பிடும் படியான குற்றச்சாட்டு ஏதும் இல்லை. முன்பு, நாங்கள் ஆளுநரிடம் ஜெயலலிதா மீது அளித்த புகார்கள் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை, சொத்து விபரங்களை புகார்களாக அளிக்கிறார். தற்போது ஆளுநரிடம் அளித்துள்ள மனுவை, தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவற்றுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வரிக்கு வரி பதில் சொல்வார். அண்ணாமலையின் பொய் புகார்களை எதிர்த்து நாங்கள் வழக்கு தொடர்ந்துள்ளோம். திமுகவின் அரசியல் வரலாற்றில் இது போன்ற வழக்குகளில் வெற்றி பெற்றுள்ளோம்.

அதேபோல், தற்போது திமுக பொருளாளர் பாலு தொடர்ந்த வழக்கும் வெற்றி பெறும். அண்ணாமலையின் அனைத்து புகாருக்கும் திமுக வார்த்தைக்கு வார்த்தை பதில் சொல்லத் தயாராக உள்ளது. மணிப்பூர் சம்பவத்தால் இந்தியா முழுவதும் உள்ள பெண்கள் கொதித்துப் போயுள்ளனர். இச்சம்பவம் ஒவ்வொரு தாய்மாரையும் உலுக்கியுள்ளது. ஏனென்றால், இப்படி ஒரு சம்பவம் இதுவரை நடந்தது இல்லை.

அமலாக்கத்துறை சோதனை சரியா என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அதில் நல்ல தீர்ப்பு வரும். போலீஸ் அதிகாரியாக அண்ணாமலை போட்ட எந்த வழக்கும் வெற்றி பெறவில்லை என்று கர்நாடகாவில் கூறுகின்றனர். இதை ஒரு பேஷனாக செய்கிறார். இவருக்கு வேற வேலை இல்லையா என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு உள்ளது.

மகளிர் உரிமைத் தொகை தேவையானவர்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும். தகுதி இருந்தும் கிடைக்காதவர்கள் அதிகாரிகளை அணுகினால், அவர்களுக்கும் கிடைக்க வழிவகை செய்யுமாறு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழகம் போல் டெல்லியில் அலப்பறை! ஆபாச வீடியோ கால் மூலம் மத்திய அமைச்சரிடம் பணம் பறிக்க முயற்சி! கும்பல் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.