ETV Bharat / state

நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியம்; காலிக்குடங்களுடன் களமிறங்கிய பொதுமக்கள்! - மணப்பாறை நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சி: முறையாக குடிநீர் வழங்காததது ஏன் எனக் கேள்வி எழுப்பியதற்கு அலட்சியமாக பதிலளித்த மணப்பாறை நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நகராட்சி நிர்வாகம்
author img

By

Published : Aug 23, 2019, 11:21 AM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி 9, 10ஆவது வார்டுகளுக்கு உட்பட்ட வாகைக்குளம் விஸ்தரிப்பு, வானக்காரன் தெரு ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் விநியோகம் அளிப்பதில்லை என நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் சார்பாக புகாரளிப்பட்டது.

அதற்கு அரசு அலுவலர்கள் அலட்சியப்போக்குடன் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து அப்பகுதி மக்கள் கோவில்பட்டி - விராலிமலை சாலையில் காலிக்குடங்களுடன் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பொதுமக்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் சமரச பேச்சுவார்த்தையை மக்கள் ஏற்க மறுத்த நிலையில், நகராட்சி அலுவலர்கள் முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து சாலை மறியல் முடிவுக்கு வந்தது. இந்தச் சாலை மறியலால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Intro:மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யக் கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்.Body:திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி 9 மற்றும் 10-வது வார்டுகளுக்குட்பட்ட வாகைக்குளம் விஸ்தரிப்பு, வானக்காரன்தெரு ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் விநியோகம் அளிப்பதில்லை என்றும், இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்தினரிடம் முறையிட்டும் அவர்கள் அலட்சியபோக்குடன் பதிலளித்து வருவதாகவும் கூறி அப்பகுதி பொதுமக்கள் கோவில்பட்டி - விராலிமலை சாலை சந்திப்பில் காலிக்குடங்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து பிரதான சாலையில் நடந்த மறியலால் வாகனங்கள் தேக்கமடைந்து போக்குவரத்து முடங்கியது.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த போலீசார் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பொதுமக்கள் போலீசாரின் சமரசத்தை ஏற்க மறுத்த நிலையில், அதனைத்தொடர்ந்து வந்த நகராட்சி அதிகாரிகள், குடிநீர் விநியோகம் முறைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆவண செய்வதாக உறுதியளித்தையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக இருந்த போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.