திருச்சி மாவட்டம் துவாக்குடி வள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜராஜசோழன். இவர் திருச்சி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் செயலாளர் ஆவார். இவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு சிலம்ப பயிற்சிக்காக மகன் சேரலாதனை(12) அழைத்துக் கொண்டு, தனது புல்லட்டில் ராஜராஜசோழன் சென்றார். பின்னர் பயிற்சி முடிந்து இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, திருவரம்பூர் தாலுகா அலுவலகம் அருகே சாலையோரம் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. புல்லட் ஓட்டி வந்த ராஜராஜசோழன் இதை கவனிக்காமல் புல்லட்டை ஓட்டியுள்ளார். இதனால் எதிர்பாராத விதமாக, லாரியின் பின்புறம் புல்லட் பயங்கரமாக மோதியது.
இதில் ராஜராஜசோழனும், அவரது மகனும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இருவரையும் அனுப்பி வைத்தனர். அங்கு நள்ளிரவு இருவரும் பரிதாபமாக உயிர் இழந்தனர். தகவலறிந்த துவாக்குடி காவல்துறையினர் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க:
’திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு தான் அதிசயம் நடக்கும்’ - திருநாவுக்கரசர்