ETV Bharat / state

Manipur Violence: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்! திரளானோர் பங்கேற்பு! - manipur violence

மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Jul 22, 2023, 6:29 PM IST

Manipur Violence: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்! திரளானோர் பங்கேற்பு!

திருச்சி: மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின பெண்கள் மீது நடைபெற்ற கொடுஞ்செயலை கண்டித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் திருச்சி மாவட்டம் சார்பாக, பாலக்கரை ரவுண்டானாவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அந்த அமைப்பின் மாவட்டத் தலைவர் குலாம் தஸ்தஹீர் தலைமை தாங்கினார்.

இதனைத் தொடர்ந்து கண்டன உரையாற்றிய மாநில செயலாளர் செங்கோட்டை ஃபைசல் பேசியபோது, "மணிப்பூரில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக மிகப்பெரிய கலவரங்கள் நடந்து வருகிறது. அதில் பல உயிர்கள் பறிக்கப்பட்டும், பல்வேறு மக்கள் தங்களுடைய வாழ்விடங்களை இழந்தும் இருக்கிறார்கள். மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நேரத்தில் தான் இந்தியர்களுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தக்கூடிய ஒருசம்பவம் நடைபெற்று சமூக வலைதளங்களில் காட்சிகளாகப் பரப்பப்பட்டு வருகிறது. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி விதியில், ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரமான வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வருகிறது. கடந்த மே மாதம் 4ம் தேதி மணிப்பூரில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த வீடியோவைப் பார்க்கும்போது காட்டுமிராண்டிகள் வாழும் தேசத்தில் நாம் வாழ்கிறோமா? என்ற அளவிற்கு அந்தப் பெண்களை சித்திரவதை செய்து, நிர்வாணமாக அழைத்துச் செல்கின்றனர். மேலும், கலவரங்கள் மூலம் அச்சத்தை ஏற்படுத்தி அதன் மூலம் வாக்குகளை பெறும் பாசிச அரசியலை பாஜக அரசு முன்னெடுத்துள்ளது.

மிகபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் இந்தச் சம்பவத்தைப் போன்று எத்தனை சம்பவங்கள் நடந்தது என்று தெரியவில்லை. அனைத்தையும் மூடி மறைக்கும் வேலையை மத்திய அரசு செய்து வருகிறது. மேலும் மத்திய அரசு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத்தவறினால், இதை நாங்கள் கையில் எடுப்போம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திர சூட் தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் பெண்களுக்கு நடந்தது மன்னிக்கமுடியாத மிகப்பெரிய குற்றம். இன்னும் அங்கு இணைய சேவை முடக்கத்தால் வெளியுலகத்திற்கு வராத சம்பங்கள் நிறைய இருக்கலாம், அவைகளும் வெளிவந்தால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும். இந்த கலவரம் ஆரம்பித்த உடனேயே தடுத்து இருந்தால், இது போன்ற சம்பவங்கள் ஏற்பட்டிருக்காது.

இந்தியர்களுக்கு மிகப்பெரிய அவமானம் ஏற்பட்டதற்குப் பின்னால் தான் மாநில பாஜக அரசு பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இதுவும் கண்டனத்திற்குரியது. காட்டுமிராண்டிகள் வாழும் தேசம் இந்தியா என்று உலக அரங்கில் இந்தியகர்களைத் தலைகுனியச் செய்த இவர்களை கடுமையான முறையில் தண்டிக்க வேண்டும். இனியும் தாமதிக்காமல் மணிப்பூர் கலவரம் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்" என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநில செயலாளர் செங்கோட்டை ஃபைசல் கூறினார்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தங்களது கண்டன குரல்களை வெளிப்படுத்தினர். இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜகீர், பொருளாளர் மால் பாஷர், துணைத்தலைவர் காஜா, துணைச் செயலாளர்கள் உமர், பிலால், ரசூல், கனி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: அடிப்படை வசதிகள் எங்கே? தர்ணாவில் ஈடுபட்ட எம்எல்ஏ அருள் - சேலத்தில் நடப்பது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.