திருச்சி கோட்ட ரயில்வே மெயில் சர்வீஸ் ஊழியர் சங்க கோட்ட மாநாடு நேற்று (பிப்ரவரி 19) கரூர் தாந்தோன்றிமலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைப்பெற்றது. இந்த மாநாட்டை அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி, சங்க கொடியை ஏற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து சங்கத்தின் மாநிலச் செயலாளர் சங்கரன் உரையாற்றினார். மாநாட்டு வரவேற்புக்குழு செயலாளர் கணேசன் வரவேற்புரையாற்றினார். இந்த மாநாட்டில் கோவிந்தராஜ், குணசேகரன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த மாநாட்டில் கீழ்காணும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த கரூர் மாவட்ட தபால் நிலையத்தில் இருந்து தபால்கள் திருச்சிக்கு அனுப்பப்பட்டு மீண்டும் கரூருக்கு அனுப்பப்படுகிறது. ஏற்கனவே இருந்ததைப் போல மீண்டும் ஆர்எம்எஸ் தபால் அலுவலகத்தில் ஸ்பீட்போஸ்ட் ஹஃப் தொடங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள டெல்டா மாவட்டங்களுக்கு தபால் சேவையை அளிப்பதற்கு உதவியாக உள்ள ராமேஸ்வரம் - சென்னை ரயில்களை மாற்றம் செய்யாமல் அதே வழியில் தொடர்ந்து இயக்க வேண்டும்.
சிக்கனம் என்ற பெயரில் மாவட்ட தலை நகரங்களில் இயங்கும் ஆரம்பப் அலுவலங்களில் மூடும் பணியை கைவிட வேண்டும், கடந்த ஆண்டு மூடப்பட்ட திருவண்ணாமலை, சிதம்பரம், அரியலூர், திருப்பாதிரிபுலியூர் அலுவலர்களை மீண்டும் திறக்க வேண்டும்.
திண்டிவனம் தபால் அலுவலகம் மீண்டும் இரவு நேரத்தில் செயல்பட்ட உத்தரவாதம் அளிக்க வேண்டும். விழுப்புரம் என்.எஸ்.ஹெச் அலுவலகமாக மீண்டும் தரம் உயர்த்த வேண்டும்.
ஸ்பீட் போஸ்ட் தபால் பட்டுவாடா, பார்சல் பிரிப்பு மையங்களை மீண்டும் அனைத்து மாவட்டங்களில் உள்ள ஆர்எம்எஸ் அலுவலங்களில் இயங்கிட அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிங்க: அஞ்சல் அலுவலகங்களில் பாதுகாப்புப் படையினருக்குச் சிறப்பு வரிசை