ETV Bharat / state

'திமுக எம்.பி.க்கள் தங்களின் சொத்தை விற்றாவது இதனை செய்க!' பொன். ராதாவின் பலே யோசனை! - election2019

திருச்சி: தமிழ்நாட்டில் வெற்றிபெற்ற 37 மக்களவை உறுப்பினர்களும் தங்களின் சொத்துகளை விற்றாவது, விவசாயக் கடன், கல்விக்கடன் முதலியவற்றை அடைக்க முன்வர வேண்டும் என்று முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

pon radhakrishnan
author img

By

Published : Jun 13, 2019, 1:55 PM IST

புதுக்கோட்டையில் நடைபெறும் பாஜக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அதிமுகவின் ஒற்றைத் தலைமை அமித் ஷாதான் என்று கூறிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன், தனது கருத்தை திரும்பப் பெறவேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இதனைத்தொடர்ந்து மக்களவைத் தேர்தலில் அதிமுக - பாஜக இணைந்து போட்டியிட்டுள்ள நிலையில் தேர்தல் முடிவு என்று வரும்போது ஒருவர் தலையின் மீது மட்டும் குற்றம் சுமத்துவது ஏற்புடையது அல்ல என்று கூறிய அவர், தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு பாஜகதான் காரணம் என்று அதிமுக நிர்வாகிகள் யாரும் கூறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்

மேலும் தமிழ்நாட்டில் வெற்றிபெற்ற 37 மக்களவை உறுப்பினர்களும் தங்களின் சொத்துகளை விற்றாவது தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியின்படி விவசாயக் கடன், கல்விக்கடன் முதலியவற்றை அடைக்க முன்வர வேண்டும் என்று பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

Intro:முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

Body:திருச்சி: 37 எம்பிக்களும் தங்களது சொத்துக்களை விற்றாவது விவசாயிகள் வாங்கிய கடனை அடைக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார். புதுக்கோட்டையில் நடைபெறும் பாஜக பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் திருச்சி வந்தார்.
அப்போது திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,
அதிமுகவுக்கு ஒற்றை தலைமை அமித்ஷா தான் என்று கொங்குநாடு மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன் கூறியதை திரும்பப்பெற வேண்டும். அவர் நாகரீகமாக பேச வேண்டும். தேனி தொகுதியில் தேர்தல் கமிஷன் தவறு செய்ததாக கூறினால், மற்ற தொகுதிகளிலும் தேர்தல் கமிஷன் ஒத்துழைப்போடு தான் வெற்றி பெற்றார்களா என்பதையும் ஒத்துக் கொள்ள வேண்டும். தேர்தல் தோல்விக்கு பாஜக தான் காரணம் என்று அதிமுக நிர்வாகிகள் யாரும் கூறவில்லை. கூட்டணி என்பது ஒவ்வொரு தேர்தலயும் பொருத்ததாகும்.நாங்கள் இணைந்து போட்டியிட்டோம். தேர்தல் முடிவு என்று வரும்போது ஒருவர் தலையின் மீது மட்டும் சுமத்துவது ஏற்புடையது அல்ல. நாடு முழுவதும் பாஜக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாக உள்ளது. அனாதைப் பிள்ளைக்கு அப்பா யாரென்று தேடுவதை விட்டுவிட்டு தோல்வியை அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
அடுத்து வரும் தேர்தலை பொறுத்து கூட்டணி தொடர்வது குறித்து கூறப்படும்.
கூட்டணி தொடர வேண்டும் என்றுதான் கூறுகிறோம். தொடர வேண்டாம் என்று கூறவில்லை.
ஆறு மாத காலத்திற்குள் வெற்றிபெற்ற 37 எம்பிக்களும் அவர்களது சொத்துக்களை விற்றாவது ஓட்டு போட்ட மக்களுக்கு விவசாய கடனை அடைத்து கொடுக்க வேண்டும். மாணவர்களின் கல்விக் கடனை அடைத்து கொடுத்தாக வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் 1967ஆம் ஆண்டு இவர்கள் பொய் கூறி ஆட்சிக்கு வந்தது போல் இன்னும் தொடர்கிறது என அர்த்தம். 1967 ஆம் ஆண்டில் மூன்று படி அரிசி உறுதி என்றார்கள். அதன் பின்னர் ஒரு படியாவது உறுதி என்றனர். இல்லையென்றால் முச்சந்தியில் வைத்து அடியுங்கள் என்று கூறினார்கள்.
அப்போது அடிக்க தவறிவிட்டார்கள் தமிழக மக்கள். தற்போது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் தமிழக மக்கள் கட்டாயம் அதை செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இல்லாத பிரச்சனைகள் பூதாகரமாக எதிர்க்கட்சிகள் வெளிப்படுத்துகின்றன. அவர்களின் காலத்தில் செய்யாத பற்றி கூறாமல், தற்போது கூறுவது என்பது வாடிக்கை. தண்ணீர் பிரச்சனை உள்ளது. அது தீர்க்கப்பட வேண்டும். இது ஒரு அரசியல் கட்சியின் பிரச்சனை கிடையாது. 50 வருடங்களாக ஆண்ட அனைத்து கட்சிகளுக்கும் பொறுப்பு உள்ளது. காவிரி ஆணையம் தீர்ப்பின்படி காவிரியில் தண்ணீர் கொடுத்தாக வேண்டும். இல்லையென்றால் 37 எம்பி.க்களும் பெங்களூர் சென்று அணையை திறந்து தண்ணீர் கொண்டு வர வேண்டும். அங்கு இவர்களது கூட்டணி ஆட்சிதான் நடக்கிறது .மத்திய அரசு செய்ய வேண்டியது செய்யும். எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியும். 40,000 கோடி ரூபாய் திட்டங்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்து லட்சம் கோடி ரூபாய் திட்டங்களை பிரதமர் மோடியின் அரசு கொடுத்துள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது. திமுக-காங்கிரஸ் கூட்டணியின் மதவாத அரசியல் காரணமாக தான் தோல்வியை தொலைவிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி மதவாத அரசியல் நடத்துகின்றனர். அவர்களை கேள்வி கேட்க வேண்டிய காலம் விரைவில் வரும் என்றார்.

Conclusion:திமுக-காங்கிரஸ் கூட்டணியின் மதவாத அரசியல் தான் தேர்தல் தோல்விக்கு காரணம் என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.