திருச்சி: மணப்பாறை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புதுக்கோட்டையைச் சேர்ந்த சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளையின், மேலாண்மை இயக்குநர் ரவிச்சந்திரனுக்கு வாழும் அன்னை தெரசா என்ற தலைப்பில் அவரது வாழ்க்கை வரலாறு குறித்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது திடீரென இஸ்லாமிய பெண் ஒருவர் மேடை ஏறினார். "முதலில் ரவிச்சந்திரன் எனக்கு வழங்க வேண்டிய 16 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாயை தனக்கு உடனடியாக வழங்க வேண்டும். பணம் கொடுத்து 13 வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை பணத்தை திருப்பி தராததால் நானும், எனது குடும்பத்தினரும் கடும் மன உளைச்சலில் இருந்து வருகிறோம்.
இதனால் பணத்தை கொடுத்துவிட்டு பிறகு நீங்கள் நிகழ்ச்சியை நடத்துங்கள். பணத்தை கொடுக்காவிட்டால் மேடையிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன்" என பேசிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: கோவை கார் வெடிப்பு வழக்கு: 6 பேரையும் வரும் 22ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவு!