திருச்சி மாவட்டம் புதுக்குடியிலிருந்து சேலத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான மருத்துவமனைக்கு சுமார் 3.25 டன் ஆக்சிஜன் திரவம் ஏற்றிக்கொண்டு லாரி சென்றுள்ளது.
நாமக்கல் அடுத்த களங்கானி என்ற இடத்தில் லாரி சென்று கொண்டிருந்தபோது லாரியின் முன்பக்க டயர் திடீரென வெடித்தலில் நிலைதடுமாறி மேம்பாலத்தின் இடதுபுறம் தலைகுப்பற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஒட்டுநர் ஸ்டிபனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற புதுசத்திரம் காவல் துறை, தீயணைப்புத் துறையினர் கவிழ்ந்த லாரியை மீட்டனர்.
விபத்து குறித்து லாரி ஒட்டுநரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.