திருச்சி: தென்னிந்திய எய்ட்ஸ் செயல்திட்ட இயக்குநர் ஜனனி இன்று திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
தென்னிந்திய எய்ட்ஸ் செயல்திட்ட இயக்குநர் ஜனனி கூறும்போது, “பாலியல் தொழில் என்பது சட்டவிரோதம் கிடையாது. பாலியல் தொழிலுக்காக ஆட்கள் கடத்தப்படுவதுதான் சட்டவிரோதம். சுய விருப்பத்துடன் பாலியல் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களை மறுவாழ்வு என்ற பெயரில் அவர்களைக் கைதுசெய்து நடவடிக்கை எடுக்கக் கூடாது.
இது தொடர்பாக திருச்சி காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் 120 காவல் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். பாலியல் தொழிலாளர்களும் இதில் கலந்துகொண்டனர். அப்போது ஐந்து கோரிக்கைகள் அவர்களிடம் முன்வைக்கப்பட்டன. அவையாவன:
- பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களைத் துன்புறுத்துபவர்கள் மீது புகாரளித்தால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுய விருப்பத்துடன் பாலியல் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களைக் கைதுசெய்து, மறுவாழ்வு திட்டங்களுக்கும் அனுப்பிவைக்கக் கூடாது.
- பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்படுபவர்களை மீட்டு மறுவாழ்வு அளிக்க வேண்டும்.
- பாலியல் வழக்குகளில் கைதுசெய்யப்படுபவர்களின் புகைப்படங்கள், பெயர்களை வெளியிடக் கூடாது. அவற்றின் ரகசியம் காக்கப்பட வேண்டும்.
- ஆணுறை போன்ற கருத்தடுப்பு சாதனங்கள் வைத்திருந்த காரணத்துக்காக பாலியல் தொழிலாளர்களைக் கைதுசெய்யக் கூடாது.
காப்பான் படம்! விவசாய நிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்திய வெட்டுக்கிளிகள்!
அதேபோல் காவல் துறையினரின் சோதனை நடவடிக்கையின்போதும், கைது நடவடிக்கையின்போதும் சுயவிருப்ப பாலியல் தொழிலாளர்களுக்குச் சொந்தமான வீடு உள்ளிட்ட சொத்துக்களை முடக்குவது, பறிமுதல்செய்வது போன்றவற்றைக் கைவிட வேண்டும்.
காவல்துறையினர் நடத்தும் சோதனையின்போது சுய விருப்பத்துடன் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் என்பதை கண்டறிந்தால் அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
மாநிலம் முழுவதும் 400 சுயவிருப்ப பாலியல் தொழிலாளர்களுடனும், நாடு முழுவதும் ஆயிரம் தொழிலாளர்களுக்கும் நாங்கள் சேவை செய்துள்ளோம்.
சுய விருப்பத்தின்பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களின் வாழ்க்கையின் தரம் 25 முதல் 30 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது. அதே சமயம் அவர்களுக்கு அச்சமும் அதிகரித்துள்ளது. இதற்கு காவல் துறையும் சமுதாயமும்தான் காரணம்” என்றார்.