திருச்சி : நாடு முழுவதும் நாளை இசுலாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தியாகத்திருநாள் என்றழைக்கப்படும் பக்ரீத் பண்டிகையின்போது ஆட்டு இறைச்சிகளை ஏழைகளுக்கு தானமாக இசுலாமியர்கள் வழங்குவார்கள்.
பக்ரீத் பண்டிகையையொட்டி, கடந்த ஒரு மாதமாக ஆடு விற்பனை உச்சத்தை எட்டியுள்ளது. ஆடுகளின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர். அதேபோல் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கும் பக்ரீத் பண்டிகை விற்பனையால் அதிக அளவில் லாபம் கிடைப்பதாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள சந்தைகளில் வியாபாரிகளும், இசுலாமியர்களும் ஆடுகளை வாங்க போட்டி போடுவதால் ஆடுகளின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பிரசித்திபெற்ற சந்தைகளில் ஒன்றான திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இருக்கும் மிகவும் புகழ்பெற்ற மணப்பாறையில் ஆட்டுச்சந்தை நடைபெற்றது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும் விவசாயிகளும் வந்திருந்தனர். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாலை துவங்கி புதன் கிழமை பிற்பகல் வரை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம்.
இதையும் படிங்க:பளு தூக்கும் வீரர்களுக்கு தமிழக அரசு ஸ்பான்சர் செய்ய வேண்டும் - தங்கப்பதக்கம் வென்ற ஆதர்ஷ் கோரிக்கை
இந்நிலையில் பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆடுகள் அதிகளவில் விற்பனையாகும் என்பதால் தங்களது ஆடுகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என எண்ணி ஆடு வளர்ப்பவர்கள், ஆடுகளை விற்பனை செய்வதற்காக அதிகளவில் மணப்பாறை சந்தைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இன்று காலை நடைபெற்ற சந்தைக்கு சுமார் 2000ற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டிருந்தன. ஆடுகளின் வரத்து அதிகமாக இருந்ததால் அதன் விலை கணிசமாக குறைந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பக்ரீத் பண்டிகைக்காக இஸ்லாமியர்கள் அதிகளவில் ஆடுகள் வாங்குவதற்காக சந்தைக்கு வந்திருந்தனர். திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்டப் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெருமளவில் வியாபாரிகளும் வந்திருந்தனர். ஆடுளின் விலை சற்று குறைந்திருந்தாலும் தங்களுக்கு கட்டுப்படியாகும் விலையிலேயே விற்பனை நடைபெறுவதாக ஆடு வளர்ப்பவர்கள் தெரிவித்தனர்.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மணப்பாறை சந்தையில் ஆடுகள் விற்பனை ரூ.1 கோடி அளவுக்கு நடைபெற்றதால் ஆடு வளர்ப்பவர்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதேபோல, கடந்த காலங்களில் தமிழ்நாட்டின் திருச்சி, ஈரோடு மாவட்டத்தின் புன்செய்புளியம்பட்டி போன்ற புகழ்பெற்ற சந்தைகளில் கால்நடைகளின் விற்பனை களைகட்டியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: viral video: நடுரோட்டில் ஆக்ரோஷமாக மோதிய யானைகள்.. வைரல் வீடியோ