ETV Bharat / state

செருப்பில் மறைத்து வைத்து ரூ.28 லட்சம் தங்கம் கடத்தல்!

திருச்சி விமான நிலையத்தில் செருப்பில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.28 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 8, 2023, 1:28 PM IST

Updated : Jun 8, 2023, 2:49 PM IST

திருச்சி: திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து, துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட‌ முக்கிய நாடுகளுக்குத் தினசரி விமானச் சேவை இயக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் ஏராளமான பயணிகள் வெளிநாடுகளிலிருந்து இந்தியா வரும் நிலையில் அவர்களில் பலர் அங்கிருந்து மறைமுகமாகத் தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.

அந்த வகையில், நேற்று துபாயிலிருந்து கொழும்பு வழியாக வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் பயணி ஒருவர் நூதன முறையில் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரையும் அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர்.

அந்த சோதனையில் ஆண் பயணி ஒருவர் செருப்பில் பேஸ்ட் வடிவில் 467 கிராம் தங்கத்தை மறைத்து வைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த தங்கத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அதன் மதிப்பு ரூ.28 லட்சத்து 30 ஆயிரத்து 954 எனத் தகவல் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: நீ மட்டும்தான் வீடியோ காட்டுவியா? - ஆபாச வீடியோவால் இளைஞரை கொலை.. தென்காசி எலும்புக்கூடு வழக்கில் பகீர் தகவல்!

இதனை அடுத்து அவரை கைது செய்த அதிகாரிகள், தங்கம் கடத்தலில் ஈடுபட்ட நபர் இதற்கு முன்பு கடத்தலில் ஈடுபட்டுள்ளனரா ? பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் உண்மையானதா ? வேறு வழக்குகள் அவர்கள் மீது உள்ளதா இவர்களுக்குப் பின்புலமாக யார் செயல்படுகிறார்கள் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியுள்ளனர்.

சமீபகாலமாகத் திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் தங்கம் கடத்தல், வெளிநாட்டு கரன்சிகள், பறவைகள், உயிரினங்கள் உள்ளிட்டவை கடத்தி வரும் சட்ட விரோதமான செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற செயல்களை கட்டுப்படுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ரயில்களை குறிவைக்கும் முயற்சியா? ரயில் பாதையில் தென்னை மரத்துண்டு வைத்த சம்பவத்தால் பரபரப்பு!

Last Updated : Jun 8, 2023, 2:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.