ETV Bharat / state

நித்தியானந்தா ஆசிரமத்தில் இளம்பெண் மர்ம மரணம்: சிபிஐ விசாரிக்க தாய் கோரிக்கை! - nithyananda latest news

திருச்சி: நித்யானந்தா ஆசிரமத்தில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அவரது தாய், ஆசிரமத்திலுள்ள மற்ற குழந்தைகளை மீட்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Mysterious death of teenager at Nithyananda Ashram
சங்கீதாவின் தாயார் ஜான்சிராணி
author img

By

Published : Nov 28, 2019, 4:08 PM IST

திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அர்ச்சுணன் - ஜான்சி தம்பதி. இவர்களின் மூன்றாவது மகள் சங்கீதா(24), திருச்சியிலுள்ள கல்லூரி ஒன்றில் பிசிஏ படித்து முடித்தார். ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட சங்கீதா, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் கடந்த 2000ஆம் ஆண்டு சேர்ந்து ஆன்மிகப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதியன்று சங்கீதா மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக ஆசிரம நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். பின்னர் உடற்கூறாய்வு செய்து அவரின் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இறுதிச் சடங்குகள் மேற்கொண்டபோது, சங்கீதாவின் உடலில் காயங்கள் இருந்தது பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து மீண்டும் சங்கீதாவின் உடலை உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என்று அவரது பெற்றோர் பெங்களூருவிலுள்ள ராம்நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து சங்கீதாவின் உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு அரசு மருத்துவரால் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அப்போது சங்கீதாவின் உடலில் எந்தவிதமான உறுப்புகளும் இல்லை என்று மருத்துவர் தெரிவித்தைத் தொடர்ந்து, அதன் அறிக்கையும் ராம்நகர் காவல் துறையினர் வசம் வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இது குறித்து பேட்டியளித்த சங்கீதாவின் தாயார், ”எனது மகள் மரணத்தில் சந்தேகம் உள்ளது. அவர் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ஒரு முறை ஆசிரமத்திலிருந்து வீட்டிற்குச் சங்கீதாவை அழைத்து வந்தோம். ஆனால், ஆசிரமப் பணியாளர்கள் மீண்டும் வந்து அவர் சிசிடிவி காட்சி பதிவுகளை திருடி வந்துவிட்டதாக கூறி அழைத்துச் சென்றனர். அதன் பின் அவர்கள் சங்கீதாவை வீட்டிற்கு திருப்பி அனுப்பவில்லை. என் மகள் கொலை செய்யப்பட்டார் என்று கூறி பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.

வழக்கு தொடர்ந்து ஐந்து நாட்களாகியும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழ்நாடு அரசும் கர்நாடக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மகளைப் போல நிறைய குழந்தைகள் ஆசிரமத்தில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு இதே நிலை ஏற்படாமலிருக்க அங்குள்ள குழந்தைகளை உடனடியாக மீட்டு வாருங்கள்” என்று கண்ணீருடன் கூறினார்.

இதையும் படிங்க: நித்யானந்தா சிஷ்யைகள் கைது! ஏன்? - முழுப்பின்னணி

Intro:நித்யானந்தா ஆசிரமத்தில் இளம் பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.Body:திருச்சி:
நித்யானந்தா ஆசிரமத்தில் இளம் பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி மாவட்டம் நவலூர்குட்டப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அர்ச்சுணன். இவரது மனைவி ஜான்சி. இவர்களுக்கு 3 மகள்கள் இருந்தனர். இதில் 3வது மகள் சங்கீதா (24). இவர் திருச்சி கல்லூரி ஒன்றில் பிசிஏ படித்து முடித்தார். ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட சங்கீதா கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் கடந்த 2000ம் ஆண்டு முதல் தங்கி ஆன்மீக பணிகளில் ஈடுபட்டு வந்தார். கடந்த 28.12.2014ம் தேதி அன்று சங்கீதா மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக ஆசிரம நிர்வாகத்தினர் தெரிவித்து, பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
திருச்சியில் இறுதி சடங்குகள் மேற்கொண்ட போது சங்கீதாவின் உடலில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் பெற்றோர் பெங்களூரு ராம்நகர் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவர் மூலம் சங்கீதா உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது சங்கீதாவின் உடலில் எந்தவிதமான உறுப்புகளும் இல்லை என்று மருத்துவர் தெரிவித்தார். இதன் அறிக்கையும் பெங்களூர் போலீசார் வசம் வழங்கப்பட்டது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதைதொடர்ந்து தங்களது மகள் மரணத்தில் சந்தேகம் உள்ளது. அவர் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ஒரு முறை ஆசிரமத்தில் இருந்து வீட்டிற்கு சங்கீதாவை அழைத்து வந்தோம். ஆனால், ஆசிரம பணியாளர்கள் மீண்டும் வந்து, அவர் சிசிடிவி காட்சி பதிவுகளை திருடி வந்துவிட்டதாக கூறி அழைத்து சென்றனர். அதன் பின்னர் சங்கீதாவை அவர்கள் வீட்டிற்கு அனுப்பவில்லை. அப்போதே சங்கீதாவின் காலில் அயர்ன் பாக்ஸ் மூலம் சூடு வைத்ததற்கான காயங்கள் இருந்தது என்று கூறி பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. நீண்ட நாட்களாகியும் தீர்வு கிடைக்காததால் இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று சங்கீதாவின் தாய் ஜான்சிராணி தெரிவித்துள்ளார்.

பேட்டி: ஜான்சிராணி.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.